சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கல்லறை! நீதிபதி அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும், சட்டக்கல்லூரி கட்டடத்தில் நீதிமன்றங்களும் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.  

வாட் யூ மீன்… மீன் சைவமா ? அதிர்வலையை ஏற்படுத்திய புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு…

மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள் என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை சார்பில் புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மீன் உணவை சைவத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாநில … Read more

கட்டுக்கடங்காத வன்முறை! மணிப்பூர் முதல்வர் பதவி ராஜினாமா செய்யமாட்டேன்! உறுதியாக சொன்ன பீரன் சிங்

India oi-Nantha Kumar R இம்பால்: தொடர் வன்முறையின் காரணமாக மணிப்பூர் முதல்வர் பதவியை பீரன் சிங் ராஜினாமா செய்ய இருந்தார். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதத்தை ஆதரவாளர்கள் கிழித்தெறிந்த நிலையில் தான் பீரன் சிங் பரபரப்பான ட்விட்டர் பதிவு ஒன்று செய்துள்ளார். மணிப்பூர் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் அங்கு பாஜக ஆட்சியை தக்கவைத்தது. 2வது முறையாக பீரன் சிங் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் தான் … Read more

The stock market hit new highs | புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை

மும்பை: இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 803 புள்ளிகள் உயர்ந்து 64,718 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை தொட்டு நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 216 புள்ளிகள் உயர்ந்து 19,189 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. மும்பை: இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 803 புள்ளிகள் உயர்ந்து 64,718 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை தொட்டு நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 216 புள்ளிகள் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

பாடகி மடோனா உடல்நிலை எப்படி உள்ளது

உலக புகழ்பெற்ற பாப் பாடகி மடோனா. ஹாலிவுட் படங்களிலும் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். 64 வயதான மடோனாவுக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மேனேஜர் கய் ஒசியாரி கூறும்போது “மடோனா தீவிரமான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது … Read more

என்னய்யா இது தனுஷ் இப்படி மாறிட்டார்..? தெறிக்கவிடும் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷின் வெறித்தனமான லுக்கில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆகியுள்ளது.’ வெளியானது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர், … Read more

மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா?

இம்பால், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் … Read more

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி – சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல், செஸ், கால்பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன், சிலம்பம், டேபிள் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.34 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய EPF, ETF ஆகியவற்றை விரைவில் வழங்க நடவடிக்கை

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது. அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002 … Read more