2023 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் பும்ரா? அஷ்வின் சொன்ன முக்கிய தகவல்!

2023 ஆம் ஆண்டு அக்டோபரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ODI உலகக் கோப்பையில் இந்தியா களமிறங்க உள்ளது.  கடந்த ​​10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெற்றிபெறாத இந்தியா இந்த முறை கட்டாயம் வெற்றி பெற முயற்சி செய்கிறது.  இருப்பினும், இந்திய அணி ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திரங்கள் காயம் அடைந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது.  செப்டம்பர் 2022 முதல் முதுகில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா விளையாடாமல் உள்ளார்.  மேலும் அதற்கான அறுவை … Read more

Artificial Intelligence: பரந்த பயன்பாட்டின் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம்

செயற்கை நுண்ணறிவு அதாவது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் (AI) என்பது பொதுவாக மனித மூளையை பயன்படுத்தி செய்யும் பணிகளை கணினி மூலம் செய்யக்கூடிய கணினி அமைப்புகளின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இது இயந்திரங்களில் கற்றல், பகுத்தறிவு, சிக்கலைத் தீர்ப்பது, கருத்தாக்கம் மற்றும் முடிவெடுத்தல் போன்ற மனித நுண்ணறிவு செயல்முறைகளைப் பின்பற்றுகிறது. AI -ஐ (செயற்கை நுண்ணறிவு) இரண்டு வகைகளாக பிரிக்கலாம் – நேரோ ஏஐ மற்றும் பொது ஏஐ (Narrow AI மற்றும் General AI) Narrow AI மற்றும் … Read more

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற புதிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறையன்பு, ஐ.ஏ.எஸ். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சிவதாஸ் மீனா, ஐ.ஏ.எஸ். அவர்களிடம் கோப்புகளை ஒப்படைத்தார். அதேபோல் தமிழக காவல்துறை தலைவராக இருந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து அவருக்கு பதிலாக புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால், ஐ.பி.எஸ். பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, … Read more

தொடர் வன்முறை! மணிப்பூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பீரன் சிங்? கடிதத்தை கிழித்த ஆதரவாளர்கள்

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் முதல்வர் பீரன் சிங் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது ராஜினாமா கடிதத்தை ஆதரவாளர்கள் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலமாக மணிப்பூர் உள்ளது. கடந்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதன்மூலம் மணிப்பூரில் தற்போது … Read more

Chinas Xi Jinping To Virtually Attend SCO Regional Meet Hosted By India | ஜூலை 4ல் இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபர், பாக்., பிரதமர் பங்கேற்பு

புதுடில்லி: ஜூலை 4ம் தேதி இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங், வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்பார் என அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்வார் என அந்நாடு அறிவித்து உள்ளது. 2001 ல், ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில், 2017 ம் ஆண்டு … Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி புகார்

நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சமீபத்தில் டிவி நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்தார். தற்போது ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார். இதையடுத்து கடந்த ஆண்டு … Read more

Manimegalai: அமெரிக்கா போய் பிச்சை எடுத்த மணிமேகலை.. கூட KPY பாலா என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிய மணிமேகலை தற்போது வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சென்றுள்ளார். அவருடன் KPY பாலாவும் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் லூட்டி வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அமெரிக்கா போனாலும், எங்க புத்தி மாறாது என அமெரிக்கா பரிதாபங்கள் சீரிஸை வெளியிட்டுள்ளார் மணிமேகலை. கேபிஒய் பாலாவுடன் தான்: குக் வித் கோமாளியில் தொடர்ந்து கோமாளியாக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்த … Read more

பேனா நினைவுச் சின்னம் – ஜூலை 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ளது. கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினா கடல் பகுதியில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின்அனுமதி … Read more

டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா

புதுடெல்லி, இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் இன்று நடக்கிறது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் காணுகிறார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு), உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), முன்னாள் … Read more

நகரும் நடைபாதையில் சிக்கிய பெண்ணின் கால் துண்டிப்பு.! தாய்லாந்தில் பரிதாபம்

பாங்காக், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டான் மியுயங் விமான நிலையத்துக்கு நேற்று 57 வயதான தாய்லாந்து பெண் பயணி ஒருவர் வந்தார். அதே நாட்டின் தென்பகுதியில் உள்ள நகோன் சி தம்மராட் மாகாணத்துக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக அவர் வந்திருந்தார். விமான நிலையத்தில் நகரும் நடைபாதை உள்ளது. அதில் அவர் சூட்கேசுடன் சென்றார். நகரும் நடைபாதை முடிவடையும் இடத்தில் போட்டிருந்த தட்டுகள் திடீரென உடைந்ததால், அதனுள் அவரது இடது கால் சிக்கிக்கொண்டது. அவர் செய்வதறியாமல் திகைத்தார். … Read more