மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்…

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்ய நேற்று இம்பால் வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சாலை வழியாக பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் நிலையை அறிய விரும்பிய அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்யக் கூறி திருப்பி அனுப்பினர். … Read more

\"டைட்டானிக்!\" கொடூர விபத்து நடந்து 10 நாள் கூட ஆகல.. அதற்குள் அடுத்த சுற்றுலாவாம்! ஓஷன்கேட் சர்ச்சை

International oi-Vigneshkumar வாஷிங்டன்: டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறி 5 பேர் உயிரிழந்த 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், ஓஷன்கேட் நிறுவனம் இப்போது மீண்டும் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து விளம்பரம் கொடுத்துள்ளது. கடந்த 1912ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.. கடந்த நூற்றாண்டில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளே பெரும் … Read more

Negotiations with Tamil Nadu Government: D.K.Sivakumar | தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை: டி.கே.சிவக்குமார்

பெங்களூரு: மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எழுதிய கடிதம்: கர்நாடக அரசின் நீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீதிமன்றத்தில் நேரடியாக தீர்ப்பாயம் அமைக்கிறோம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரு மாநில அரசுகளிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஆட்சி அமைத்து ஒரு மாத காலமே ஆவதால், கர்நாடகா மக்களின் நிலையை எடுத்துரைக்க கால அவகாசம் வேண்டும். உச்சநீதிமன்றத்தில் 12 வாரம் … Read more

பேரழகி 2, அர்ச்சனைப் பூக்கள்: 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் டப்பிங் தொடர்கள்

வருகிற 3ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனனில் பேரழகி 2, மற்றும் அர்ச்சனை பூக்கள் என்கிற இரண்டு புதிய தொடர்கள் ஒளிரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 'பேரழகி 2' தொடர் இரவு 8.30 மணிக்கும், 'அர்ச்சனை பூக்கள்' தொடர் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு தொடர்களும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'லக்ஷனா' மற்றும் 'பாக்யலட்சுமி' தொடர்களின் டப்பிங் வெர்சனாகும். 'பேரழகி 2' தொடரில் விஜயலட்சுமி, சுக்ருதான நாக் நடித்துள்ளனர். இந்த இருவரை சுற்றி … Read more

Ajith: மீண்டும் அஜித்தை டார்கெட் செய்த ஏஆர் முருகதாஸ்… இந்த முறை கூட்டணி கன்ஃபார்ம்!

சென்னை: அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகியுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. அதன்பின்னர் அஜித் நடிக்கவுள்ள ஏகே 63 திரைப்படம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இப்படம் மூலம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் – அஜித் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. மீண்டும் இணையும் அஜித் – ஏஆர் முருகதாஸ் கூட்டணி:அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதனைத் … Read more

Seltos Teaser – 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது

வரும் ஜூலை 4, 2023-ல் கியா மோட்டார் நிறுவனத்தின் மேம்பட்ட செல்டோஸ் எஸ்யூவி வெளியாக உள்ள நிலையில் டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாத துவக்கத்தில் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம். செல்டோஸ் காரின் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இடம்பெறாது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் கூடுதலாக புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெற உள்ளது. 2023 Kia Seltos Facelift வெளிநாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற … Read more

எவரையும் கைவிடாத வகையில் “அஸ்வெசும” திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்டில் மீண்டும் வாய்ப்பு – எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை சமர்பிக்க ஜூலை 10 வரையில் கால அவகாசம். “அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில் 3.3 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் “அஸ்வெசும” பலன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என்ற வகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காக 02 மில்லியன் பேரின் பெயர் பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதேச … Read more

`வெற்றிமாறன், தியாகராஜன் குமாராஜாவுக்கு அனுப்பினேன்; இளையராஜாவுக்கு அனுப்பல'- இசையமைப்பாளர் மிஷ்கின்

இசையமைப்பாளர் மிஷ்கின்… இயக்குநர், நடிகர் எனத் தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்துவரும் மிஷ்கின், இப்போது இசையமைப்பாளராகப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநரும், மிஷ்கினின் தம்பியுமான ஆதித்யாவின் அடுத்தப் படம் ‘டெவில் (Devil)’. விதார்த், பூர்ணா, சுபாஸ்ரீ உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் அவரே எழுதி, இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ‘கலவி’ எனும் பாடல் … Read more

போக்குவரத்து சிக்னலின் டிஜிட்டல் போர்டில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்: வீடியோ பகிர்ந்த நெட்டிசன் – சீர் செய்த போலீஸார்

சென்னை: சென்னை – திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னலின் டிஜிட்டல் போர்டில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் வாசம் ஒளிர்ந்துள்ளது. இதனை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பேரில் அதை சீர் செய்துள்ளனர் சென்னை போக்குவரத்து போலீஸார். சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு போலீஸார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்கள். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் விதிப்பது, அது சார்ந்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்வது என … Read more

“ஏக்நாத் ஷிண்டே அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது” – சஞ்சய் ரவுத்

மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். சிவசேனா (யுடிபி) மாநிலங்களவை எம்பி சஞ்சய் ரவுத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கடந்த 2019ம் ஆண்டு ஒரு சோதனையை மேற்கொண்டார். அவரது அந்தச் சோதனை தோல்வியில் முடிந்து அவருக்கு எதிராகவே திரும்பியது. அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைக்க … Read more