மெக்சிகோவில் தீவிர வெப்ப அலை – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த 3 வாரங்களாக நீடிக்கும் தீவிர வெப்ப அலையினால் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குறிப்பாக ஜூன் 18 முதல் 24 வரை மெக்சிகோவில் அதிதீவிர வெப்பம் பதிவாகி இருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பஅலை காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் பலியாகி … Read more

வியாபாரிகளுக்கு சிக்கல்: இனிமேல் இதற்கும் கட்டணமா? வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அந்த கட்டணத்தை தமிழக அரசே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக … Read more

Maamannan collection: வசூல் மன்னனாக மாறிய மாமன்னன்: முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா!!!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- Udhayanidhi Stalin: மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் படம் கில்லியாக மாறியிருக்கிறது. ​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. மாமன்னன் படம் பார்க்கும் அனைவரும் அது குறித்து நல்லவிதமாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் … Read more

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்.. போட்டியாளராக பெண் பேருந்து ஓட்டுனர்..

Big Boss Tamil Contestant List 2023 Season 7: ரசிகர்களின் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய வீராங்கனையின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு! குளோபல் இந்தியன் ஐகான் மேரி கோம்

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்த ஆண்டின் குளோபல் இந்தியன் ஐகான் விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டார். இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான மோரி கோம், பத்ம விபூசண் விருது உட்பட பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரர். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை மேரி கோம்.  சர்வதேச குத்துச்சண்டை மையத்தின் (AIBA) தரவரிசையில், உலக குத்துச்சண்டை வீராங்கனைகளில் 4 ஆவது இடத்தில் உள்ளார் மேரி கோம். … Read more

சத்திய சோதனை: இரண்டாவது படத்தை இயக்குவதற்கு 6 வருட இடைவெளி ஏன்? – மனம் திறக்கும் சுரேஷ் சங்கையா

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. கிடாய் வெட்டப்போன இடத்தில் நடக்கும் ஒரு சம்பவமும், அதைத் தொடர்ந்து அரங்கேறும் கலாட்டாக்களுமாக, படத்தின் கதை உங்களுக்கு நினைவில் இருக்கும். சுரேஷ் சங்கையா, இப்போது தன் அடுத்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘சத்திய சோதனை.’ கதையின் நாயகனாக பிரேம்ஜி நடித்திருக்கிறார். சுரேஷ் சங்கையா ”தமிழ் சினிமாவுல போலீஸ் ஸ்டேஷன்னா ஒரு செட்டப் இருக்கும். உள்ளே நடக்கற விஷயம் பரபரப்பாகவும் … Read more

எச்சரிக்கை! கழிப்பறையில் மொபைல் யூஸ் பண்ணுவீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க!

கோவிட்-19 சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் சானிடைசர்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஒரு நாளைக்கு பல முறை தங்கள் கைகளை சுத்தம் செய்கிறார்கள். ஆனால் அனைத்து சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்குப் பிறகும், நீங்கள் நாள் முழுவதும் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்களை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள் என்று சொன்னால் என்ன செய்வது? இந்த பாக்டீரியாக்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், உங்கள் ஸ்மார்ட்போன் நீங்கள் எடுத்துச் செல்லும் அழுக்குப் … Read more

உலகளவில் 69.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.95 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.34 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post உலகளவில் 69.09 கோடி பேருக்கு கொரோனா first appeared on www.patrikai.com.

வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! உ.பி முதல்வர் யோகி பேச்சு

India oi-Halley Karthik லக்னோ: வளர்ச்சிக்கான பாதையில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் புதிய திட்டம் உட்பட 32 திட்டங்களின் பரிந்துரைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் பின்னர் பேசிய அவர், “கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாத சாதனைகளை பாஜக அரசு செய்திருப்பதை … Read more

Pakistans BIG Khalistan Conspiracy Against India EXPOSED: Weapons, Drugs, And Turning Criminals Into Terrorists | காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், போதைப்பொருள், நிதியுதவி: இந்தியாவுக்கு எதிராக பாக்., சதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் நிதி உதவி செய்தது அம்பலமாகியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைவதும், அதனை நம் ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. அதேபோல், இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாமல் பறக்கும் ட்ரோன்களை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் பல்வேறு மாநில போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் … Read more