ஜூலை  12 முதல் தீபாவளி ரயில் டிக்கட் முன்பதிவு தொடக்கம்

சென்னை ஜூலை 12 ஆம் தேதி முதல் தீபாவளிக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.  குறிப்பாக ரயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். பெரும்பாலும் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். தீபாவளிக்கு முன்பாக ரயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த … Read more

\"ரிவர்ஸ் கியர்\".. மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு தேவையில்லை..அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பரபர தீர்ப்பு

International oi-Hemavandhana நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள் தந்திருந்தனர்.. இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை தடை செய்ய 3 நீதிபதிகள் … Read more

கவினுக்கு ஜோடியாக இவானா? திவ்ய பாரதி?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். டாடா படத்தின் வெற்றிக்கு பின் தற்போது இவர் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இளன் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க லவ் டூடே நாயகி இவானா மற்றும் … Read more

101-year-old Sikh gets Britains highest honor | 101 வயது சீக்கியருக்கு பிரிட்டனில் உயரிய விருது

லண்டன் : இரண்டாம் உலகப் போரின்போது போரிட்ட 101 வயது சீக்கிய முன்னாள் ராணுவ வீரர் ராஜிந்தர் சிங் தத்துக்கு உயரிய விருது வழங்கி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் கவுரவித்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள இந்தியா சர்வதேச அமைப்பின் சார்பில் இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவை குறிப்பதற்காக இந்தியா – பிரிட்டன் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பங்கேற்றார். இதில் இரண்டாவது உலகப் போரில் … Read more

Pushp 2 -சண்டை காட்சிக்கு மட்டும் 80 லட்சம் ரூபாய்.. புஷ்பா 2 டீமின் அசுர உழைப்பு

சென்னை: Pushpa 2 (புஷ்பா 2) புஷ்பா 2 படத்தின் சண்டைக் காட்சிக்கு 80 லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது … Read more

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர். துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இலங்னை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், ஏனைய உறுப்பினர்களாக நிமலசேன கார்தியா புந்திஹேவா, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்சானா பாத்திமா மற்றும் கலாநிதி தினுக் குணத்திலக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவும் ஏனைய உறுப்பினர்களாக … Read more

`இனி வேண்டாம்!' கணவனுக்காக விலகிய பிரியங்கா; `சீதா ராமன்’ ஹீரோயினான சசிகுமார் பட நடிகை!

ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் `சீதாராமன்’. சன் டிவியில் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த ஹிட் தொடரான `ரோஜா’ சீரியலில் நடித்த பிரியங்காவை அதிக சம்பளம்  கொடுத்து இந்தத் தொடரின் கதாநாயகியாகக் கமிட் செய்தார்கள். சீரியலின்  புரோமோவே மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டது. பிரியங்கா தவிர, ரேஷ்மா, சாக்‌ஷி சிவா, வினோதினி உள்ளிட்ட மேலும் சிலரும் நடிக்க,. டி.ஆர்.பி.யிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கிய சூழலில், தொடரிலிருந்து ஹீரோயின் பிரியங்கா வெளியேறினார். இது தொடர்பாக `நீ நடிச்சது போதும்..!’- ஹிட் சீரியலிலிருந்து கண்ணீருடன் வெளியேறும் பிரியங்கா?!காரணம் என்ன? … Read more

பணியிட மாற்றம்: மின் ஊழியர் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மின் வாரியத்தில் பணியிட மாற்றம் கோரி வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதனால், புதிதாக பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், இடமாற்றம் கிடைக்கப்பெறாதோரும் ஜூலை 1 முதல்இணைய வழியில் … Read more

அமர்நாத் யாத்திரை 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

ஸ்ரீநகர்: இமயமலைத் தொடரில் தெற்கு காஷ்மீரில் இயற்கையாக தோன்றும் அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். காஷ்மீரின் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்கின்றனர். இந்த ஆண்டுக்கான முன்பதிவு கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இதன்படி அமர்நாத் புனித யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். புனித யாத்திரை நாளை தொடங்கி, ஆகஸ்ட் 31-ம் தேதி முடிகிறது. கடந்த ஆண்டு யாத்திரையின் … Read more

டைட்டன் நீர்மூழ்கி பாகங்களுடன் மனித உடல் உறுப்புகளும் மீட்பு – ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது

வாஷிங்டன்: அட்லாண்டிக் கடலில் அழுத்தம் காரமாக உடைந்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி பாகங்களுடன், மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கனடா அருகே வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட, டைட்டன் என்ற நீர்மூழ்கியில் 5 பேர் கடந்த 18-ம் தேதி சென்றனர். அவர்கள் சென்ற சில மணிநேரத்தில் நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டானது. இதை தேடும்பணி 5 நாட்களாக நடந்தது. … Read more