திருப்பூர்: சகோதரருடன் தகராறு; வீட்டை உள்பக்கமாக பூட்டி தீ வைத்த இளைஞர் – மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, யசோதா தம்பதி. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் தெய்வசிகாமணி இறந்துவிட்டார். கடந்த ஆண்டு யசோதா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இத்தம்பதியின் மகன்கள் கோகுல் (29) தினேஷ் (20). பெற்றோர் இறந்ததால், ஆதரவற்ற நிலையில் இருந்த கோகுல், தினேஷ் திருப்பூர் குமார் நகரில் உள்ள அவர்களது பாட்டி வள்ளியம்மாள் வீட்டில் வசித்து வந்தனர். பெற்றோர் இறந்த நிலையில் கோகுல், தினேஷ் ஆகிய இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். … Read more