பெற்றோர்கள் ஏமாற்றம்… அடுத்தடுத்து மூடப்படும் அங்கன்வாடி மையங்கள்… ஏன் இந்த திடீர் முடிவு?

தமிழகத்தில் பால்வாடி என்றால் பலருக்கும் தெரியும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் வழங்கவும், ஆரம்ப கல்விக்கான அச்சாரம் போடவும், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. அரசின் பார்வையில் அங்கன்வாடி மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தை பிறந்தது முதல் 6 வயது ஆகும் வரை தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகின்றன. அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் போராட்டம்! அங்கன்வாடி மையங்களின் சிறப்பு இதுதவிர வளர் இளம் பெண்களுக்கு தேவையான இரும்பு சத்து … Read more

ராகுல் காந்தி மணிப்பூரில் தடுத்து நிறுத்தம் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று சென்றார். ஆனால் அவர் தடுத்து … Read more

The relative who hid the person who died after the tree fell was arrested | மரம் விழுந்து இறந்தவரை மறைத்த உறவினர் கைது

மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான சிட்டி வாரை எஸ்டேட் நார்த் டிவிஷனைச் சேர்ந்தவர் மணிகண்டன் 47. இவர் கடந்த ஜன., 11ல் இறந்தார். கழிப்பறையில் விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கழிப்பறையில் விழுந்து இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்தபோது மரம் விழுந்து இறந்தது தெரிந்தது. போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று மணிகண்டன் மற்றும் அவரது சகோதரியின் … Read more

டெவில் : முதல் சிங்கிளான ‛கலவி' பாடல் வெளியானது

சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் ஆனவர் மிஷ்கின். அதன் பிறகு அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் உட்பட பல படங்களை இயக்கினார். தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும், லியோ, மாவீரன் போன்ற சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தனது சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ள டெவில் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் மிஷ்கின். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான கலவி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. … Read more

Maamannan Mistakes: மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் செய்த பெரிய மிஸ்டேக்.. என்ன தெரியுமா?

சென்னை: பட்டியலின மக்களாக ஒதுக்கப்பட்டவர்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒன்று தான் என்கிற கருத்தை வலியுறுத்தியும் இந்த படத்தை எடுத்ததற்காக மாரி செல்வராஜ் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர் தான். ஆனால், மாமன்னன் படத்தில் கதை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் ஏகப்பட்ட பிழைகளை மாரி செல்வராஜ் செய்துள்ளார். மாமன்னன் படத்திற்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் குவிந்து கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் இரு விதமான எதிர்ப்பு கருத்துகளும் எழுந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி … Read more

செந்தில் பாலாஜி நீக்கம் | "தமிழகத்தின் அமைதி வாழ்வை சீர்குலைக்கும் அரசியல் சதி" – முத்தரசன் கண்டனம்

சென்னை: “ஆளுநர் ஆர்என் ரவி எல்லையில்லா அதிகாரம் கொண்டவராக கருதி செயல்படுவது தமிழ்நாட்டின் அமைதி வாழ்வை சீர்குலைக்கும் அரசியல் சதி” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி மக்கள் வாக்களித்து தேர்வு செய்து, அமைக்கப் பெற்றுள்ள சட்டமன்றத்தின் அரசியல் அதிகாரத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அரசியல் அமைப்பு அதிகாரம் கொண்ட அமைச்சரவையினையும் … Read more

அமெரிக்க இன்ஜினுடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானம் 2025-ல் தயாராகிவிடும்

சண்டிகர்: அமெரிக்க இன்ஜினுடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானம் 2025-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் எனவும், இதன் 90 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எனவும் ஏரோனாடிக்கல் மேம்பாட்டு முகமையின் இயக்குநர் பிரபுல்லா சந்திரன் தெரிவித்தார். இந்திய விமானப்படைக்கு தேவையான இலகு ரக போர் விமானத்தை(எல்சிஏ) தேஜஸ் என்ற பெயரில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம்(எச்ஏஎல்) தயாரிக்கிறது. ஏற்கெனவே தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்: ஐந்து நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் ( 29.06.2023 மற்றும் 30.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 01.07.2023 மற்றும் 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களை சந்தித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் மற்றும் ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பேரல் ஆகியோரை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கார்கே டிவிட்டரில் இது குறித்து, “ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் உடனான சந்திப்பில், பொதுவான ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் உருவான மற்றும் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஜெர்மனி … Read more

ட்விஸ்ட்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. பெரிய சிக்கல் வரப்போகுது- ஆளுநர் பின்வாங்கியதற்கு காரணம் இதானா?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12ஆம் தேதி … Read more