மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியான த்ரிஷா

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு த்ரிஷா தனது இரண்டாவது ரவுண்டை அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார். 'லியோ' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். 'தி ரோட்' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். 'ராம்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். அடுத்து அஜித் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புரோ டாடி' என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் சிரஞ்சீவி … Read more

Thaman: தமனுக்கு வார்னிங் கொடுத்த மகேஷ் பாபு..? எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ‘குண்டூர் காரம்’ என கடந்த மாதம் படக்குழு அறிவித்திருந்தது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கு தமன் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுக்கும் தமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமனுக்கு வார்னிங் கொடுத்த மகேஷ் பாபு: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் … Read more

தமிழக கவர்னரை ஜனாதிபதி நீக்க வேண்டும்: காங்.மூத்த தலைவர் மணிஷ் திவாரி

புதுடெல்லி, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அறிவித்து இருந்தார். அமைச்சரை பதவி நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை எனவும் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இது தொடர்பாக கூறியிருந்தார். செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவிற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட … Read more

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர்;இந்திய அணி சாம்பியன்…..!!

பூசன், தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் நடைபெற்று வந்தது. இதில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.இந்த தொடரின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று அரங்கேறியது. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரான் மற்றும் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை விழ்த்தி தங்க … Read more

"எந்த வகை ஆபாசப் படங்கள் பிடிக்கும்" பில் கேட்ஸ் நிறுவனத்தில் பெண்களிடம் பாலியல் ரீதியான கேள்விகள்…!

வாஷிங்டன் கோடீஸ்வரர் பில் கேட்ஸின் தனியார் அலுவலகத்தில் வேலை தேடிய சில பெண்களிடம் அவர்களின் பாலியல் வரலாறுகள், நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசங்கள் போன்ற சில பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். பல காலம் இவர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றது முதலே இவரது பெயரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. … Read more

Toyota Hilux – டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கிற்கு எந்த தள்ளுபடியும் வழங்கவில்லை

சமீபத்தில் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கிற்கு ரூ.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக வந்த செய்தியை டொயோட்டா நிறுவனம் முற்றிலும் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எவ்விதமான தள்ளுபடியும் வழங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிக்கப் டிரக் மாடலுக்கு பெரிய வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், சில செய்தி நிறுவனங்கள் டீலர்கள் ரூ.8.00 லட்சம் முதல் ரூ.10.00 லட்சம் வரை வழங்குவதாக தகவல் வெளியானது. Toyota Hilux Pick-up ஹைலக்ஸ் பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை: “டொயோட்டா ஹைலக்ஸ் மாடலுக்கு … Read more

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலை பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு இன்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில் அவர் கொழும்பு … Read more

“தனி மனிதனைப் பாதுகாக்க, முழு அரசையும் களமிறக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!" – அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மதியம், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். பின்னர் அந்த உத்தரவை அவரே தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். ஓர் அமைச்சரை, அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்குள் பா.ஜ.க செல்ல விரும்பவில்லை. 1979-ம் ஆண்டு நடந்த ‘கருணாநிதி வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கு விசாரணையில், குறிப்பிட்ட அமைச்சரை நீக்க … Read more

திமுக எம்எல்ஏ குவாரிக்கு ரூ.23.54 கோடி உள்பட கரூரில் விதிகள் மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி … Read more

மணிப்பூரில் கட்டுக்குள் வராத வன்முறை: பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் பைரன் சிங் திட்டம்

இம்பால்: மணிப்பூரில் இனக் கலவரம் மூண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவுறும் நிலையில் அம்மாநில முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை இன்று (ஜூன் 30) ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மதியம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அனுசுயா உய்கியிடம் ஒப்படைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாகப் பற்றி எரிகிறது. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். … Read more