Vijay: தங்கைக்கு வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்த தளபதியின் மகன்: தீயாய் பரவும் வீடியோ.!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். இவரது ஒவ்வொரு பட ரிலீசையும் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். விஜய் நடிப்பில் தற்போது ‘லியோ’ படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா பள்ளி படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு ஜேசன் சஞ்சய் மாலை அணிவித்து வாழ்த்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 … Read more

அஸ்தியாக வந்த மீனாட்சி..சோகத்தில் குடும்பத்தார்..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்!

Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்று நடைபெற இருக்கும் சம்பவங்கள் குறித்து தெரிந்து கொள்வோமா.   

புட்லூரில் பரபரப்பு: உயிருடன் இருந்த அம்மாவிற்கு ஈமச்சடங்கு செய்த மகன்..கதறி அழுத தாய்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அம்மா உயிருடன் இருப்பது தெரியாமல் அவரது மகன் தாய்க்கு ஈமசடங்குகள் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

MS Dhoni: தோனிக்கு முடிந்தது சர்ஜரி… இத்தனை மாதங்கள் ஓய்வு தேவையா?

MS Dhoni Surgery: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு முழங்காலில் இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை தரப்பில் இருந்தும், சிஎஸ்கே அணி தரப்பில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாகவும், அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இன்னும் நாள்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிஎஸ்கே அணியின் … Read more

செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க ரோபோ…!

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க மனித உருவ ரோபோவை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. அமெக்கா என்ற அந்த ரோபோவின் முகபாவனைகளைக் கட்டுப்படுத்த அதன் தலையில், சமிக்ஞைகளை இயக்கங்களாக மாற்றுவதற்கான சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், அமெக்காவின் புன்னகை, கண் சிமிட்டல் போன்றவை மனிதர்களைப் போன்றே இருப்பதாகவும், அதை உருவாக்கிய நிறுவனத்தின் தலைவர் தெரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அமெக்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ரோபோக்கள் மிகவும் … Read more

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக கையாள்கிறோம்: அனுராக் தாகூர்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமம் எனக்கூறிய அவர், அனைத்து வீரர், வீராங்கனைகளும் தங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார். ஜூன் 1-ல் மல்யுத்த வீராங்கனைக்ளுக்கு ஆதரவாக சம்யுக்த் கிசான் மோர்சா (Samyukt Kisan … Read more

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால்   ஸ்டாலின் அறிக்கை

சென்னை தற்போது சென்னை வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜக அல்லாத முதல்வர்களைச் சந்தித்து வருகிறார்.  அவ்வகையில் இன்று அவர் சென்னையில் உள்ள தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை பஞ்சாப் முதல்வருடன் சந்தித்தார்.  சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் இருந்தனர் இந்த சந்திப்புக்குப் பிறகு டில்லி … Read more

கெலாட்-பைலட் மோதல்.. ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கும் காங்கிரஸ்! பரபர கருத்து கணிப்பு

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸில்முதல்வராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜகவிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மாநில காங்கிரஸ் … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் ரேகா

'கடலோர கவிதைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேகா. அதன் பிறகு புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், சின்னமணிக்குயிலே, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, என் பொம்முட்டி அம்மாவுக்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். 1986ல் அறிமுகமான ரேகா, 2000மாவது ஆண்டில் இருந்து குணசித்ர நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் 20 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். 'மிரியம்மா' … Read more