குறைகளுடன் வருவோருக்கு என் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் :  தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் வி கங்காபூர்வாலா குறைகளுடன் வருவோருக்கு தமது கதவுகள் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி  ஓய்வு பெற்றார். அதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதையொட்டி மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ௨௪ ஆம் தேதி அன்று டி.ராஜாவும் பணி ஓய்வு பெற்றார். இதை அடுத்து, … Read more

தெறிக்கவிட்ட சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை! காப்பி அடித்து களமிறக்கியதாக முதல்வர் ஜெகன் சீற்றம்!

India oi-Mathivanan Maran கர்நூல்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் அம்மாநில அரசியல் களம் அக்னி வெயிலைப் போல கனன்று கொண்டிருக்கிறது. ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள். ஆந்திராவைப் பொறுத்தவ்ரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு … Read more

Kerala Plans Passenger Ship Service To Gulf To Beat Exorbitant Air Charges | அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை: கேரள அரசு திட்டம்

திருவனந்தபுரம்: விமான கட்டணம் அதிகம் உள்ளதால், அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் சேவையை துவக்க கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் கூறியதாவது: பண்டிகை நாட்களில், விமான நிறுவனங்கள் சாமனிய மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் அவர்கள் சொற்ப பணத்தை, வெளிநாட்டு பயணத்திற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால், கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை துவக்குவது குறித்து நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் … Read more

விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்

ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது மூத்த மகள் இயக்குனர் ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‛ஜெய் பீம்' பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். போலி என்கவுன்டர் தொடர்புடைய கதைக்களத்தில் இந்தப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. கணிசமான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க சம்மதம் … Read more

Elon Musk Is Richest Person In World Again | உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னர், முதலிடத்தில் இருந்த அர்னால்ட் பெர்னார்ட்டின் எல்விஎம்ஹெச் பங்குகளின் விலை சரிவு காரணமாக எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார். எல்விஎம்ஹெச் பங்கின் மதிப்பில் சுமார் 2.6 சதவீதம் நேற்று சரிந்துள்ளது. இதனால், பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். … Read more

Bharathi kannamma :திருமண ஏமாற்றுக் கும்பலில் மாட்டும் கண்ணம்மா குடும்பத்தினர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா 2 தொடர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கண்ணம்மாவின் அக்கா சாந்தியின் திருமண ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. தொடரில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிபத்தில் சிக்கி, வெண்பாவின் முகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமண ஏமாற்று கோஷ்டியிடம் சிக்கும் கண்ணம்மா குடும்பத்தினர் : விஜய் டிவியின் … Read more

Ather 450S escooter Price and specs – ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெளியானது

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450S விற்பனைக்கு ₹ 1,29,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 115Km/charge வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள 450X மாடலின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டு பேஸ் வேரியண்ட் ₹1,46,664 ஆகவும் கூடுதலாக புரோ பேக் பெற்ற வேரியண்ட் ₹ 1.67,718 ஆக உள்ளது. Ather 450S Electric scooter தோற்ற அமைப்பில் 450X மாடலை போல அல்லாமல் டிசைன் சற்று … Read more

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – கல்வி அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் 4,200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (30) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் 4,200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்திர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கமைய செந்தில் தொண்டமானின் … Read more

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கை முடக்குவதா? ஸ்டாலின் கண்டனம்

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கை முடக்குவதா? ஸ்டாலின் கண்டனம் Source link

MRP விலையில் மட்டுமே சரக்கு.. அதுவும் அரசு டாஸ்மாக் கடையில்.. எங்கு தெரியுமா.?

தமிழகத்தில் அரசு அனுமதி பெற்று 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. சமீபகாலமாக டாஸ்மாக் கடைகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கட்டாயம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அவ்வாறு செயல்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற புகாரில் தற்போது வரை 1500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை … Read more