இறுதிச்சடங்கின்போது அசைந்த இளைஞரின் உடல்… அலறி ஓட்டம்பிடித்த உறவினர்கள்! – ம.பி `திடுக்'
மத்தியப் பிரதேசம் மாநிலம், மெரேனா பகுதியில் வசித்தவர் ஜீது பிரஜாபதி என்ற இளைஞர். இவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை மயங்கி விழுந்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் அவரின் மூக்கு, வாய்ப் பகுதிகளில் விரல் வைத்து, சுவாசத்தை சோதித்திருக்கிறார்கள். அவர் சுவாசமற்று இருந்ததால், அவர் உயிருடன் இல்லை என அவரது குடும்பத்தினர் முடிவுசெய்திருக்கிறார்கள். மேலும், அவருடைய இறுதிச்சடங்குகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் சாந்தி … Read more