அதிக சம்பளம் என்றால் வில்லனாக நடிப்பாரா கமல்ஹாசன்?

தமிழ் சினிமாவின் சாதனையாளர் என்று மற்ற திரையுலகக் கலைஞர்களாலும் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். அவர் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'சலார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு அதற்காக கதாநாயகனாக நடிக்க வாங்கும் சம்பளத்தை வழங்கத் தயாராக உள்ளார்கள் என்றும் செய்தியைப் பரப்பி வருகிறார்கள். ஒரு நடிகர் என்ன சம்பளம் வாங்குகிறார் என்று அவருக்கும் அவருக்கு அந்த சம்பளத்தைக் … Read more

Bhumika Chawla: பீச்சில் குழந்தையை போல ஆட்டம் போட்ட பத்ரி பட நடிகை.. பூமிகாவின் செம பிக்ஸ்!

சென்னை: நடிகை பூமிகா சாவ்லா பீச்சில் குழந்தையை போல பீச்சில் தனது மகனுடன் ஆட்டம் போட்ட காட்சிகளை வீடியோவாக தொகுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரோஜாக் கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் என ரொமான்டிக் ஹீரோயினாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா. 44 வயதை கடந்துள்ள நடிகை பூமிகா சாவ்லா இன்னமும் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டி … Read more

Kinetic Luna electric – கைனடிக் E-லூனா எலக்ட்ரிக் மொபெட் அறிமுகம் எப்பொழுது ?

பிரபலமான லூனா மொபெட்டின் அடிப்படையில் கைனடிக் க்ரீன் எனர்ஜி நிறுவனம், E-லூனா மாடலை 100 கிமீ ரேஞ்சு கொண்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளதை இந்நிறுவனத்தின் தலைமை செய்ல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். கைனெடிக் கிரீன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுலஜா ஃபிரோடியா மோட்வானி இ-லூனா என்ற பெயரையும் உறுதிப்படுத்தியுள்ளார். Kinetic E-Luna இந்தியாவின் ஐகானிக் மாடல்களில் ஒன்றான லூனா மொபெட் பிரபலமாக விற்பனையில் இருந்த நிலையில் காலப்போக்கில் மறைந்த போனது. மீண்டும் எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் … Read more

தாய்லாந்துடனான உறவுகளை இலங்கை புதுப்பிக்கிறது

பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். பிரதமர் திணேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான மூன்று நாள் விஜயத்தின் போது பேங்கொக்கில் உள்ள அரசாங்க இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம் , முதலீடு மற்றும் சமய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காகவும் பிரதமர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். … Read more

மூன்றாவது நாளாக தொடரும் அவலம்.. அலட்சியம் காட்டும் ஆவினுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்..!!

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணா நகர், மதுரவாயல், திருவேற்காடு, கொரட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஆவின் பால் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. தாமதமாக கிடைக்கும் ஆவின் பாலும், சில சமயங்களில் கெட்டுப்போவதாக கூறும் இல்லத்தரசிகள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் … Read more

மும்பை: கணவனை சரியாக கவனிக்காத மனைவி; கோபத்தில் வளர்ப்பு மகளை தீ வைத்து எரித்த தந்தை

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் சிறிய பிரச்னைக்கெல்லாம் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். அதிகமாக பணப்பிரச்னையால்தான் இது போன்ற தம்பதிகளிடையே பிரச்னை ஏற்படுகிறது. மும்பை தாராவி ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்த்கிஷோர் பட்டேல். இவர் காஜல் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார். காஜல் பெண் குழந்தை ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார். வளர்ப்பு மகளுக்கு இப்போது 20 வயதாகிறது. காஜலையும், வளர்ப்பு மகளையும் நந்த்கிஷோர் கவனித்துக்கொண்டார். ஆரம்பத்தில் வளர்ப்பு மகள் … Read more

ஜூன் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் ஜூன் 7ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை … Read more

தோனி அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும் ரசிகர்களுக்காக வேண்டி இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி தெரிவித்தார். இந்தச் … Read more

உங்க செல்போன் ரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதா..? பதறாமல் இதை பண்ணுங்க.. தானா வந்து சேரும்!

சென்னை: ரயில் பயணத்தின் போது நமது செல்போன் தவறி வெளியே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். எந்தவித பதட்டமும் இல்லாமல் சிம்பிளான சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும். நமது செல்போன் நம் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும். இன்றைய நவீன உலகத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ தொடங்கிவிட்டது. ஒரு கம்ப்யூட்டரை போல பல தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும் என்பதால் அலுவல் ரீதியான சில ஆவணங்கள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் … Read more

சுனில் கனுகோலு: இனிமே இவர் தான் நம்பர் ஒன்… காங்கிரஸ் வியூகமும், சித்தராமையா முடிவும்!

பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூக நிபுணர் பணிக்கு ஓய்வு அளித்து விட்ட நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருப்பவர் தான் சுனில் கனுகோலு. கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் எனக் கூறப்படுகிறது. மிகவும் அமைதியானவர். வேலை என்று வந்துவிட்டால் உரிய தரவுகளுடன் தரமான சம்பவங்கள் அரங்கேற்றுபவர். சுனில் கனுகோலு பெரிதாக வெளியில் தெரியாத நபர். எப்போதும் கள நிலவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை கைகளில் … Read more