மணிப்பூரில் 3-வது நாளாக அமித்ஷா ஆலோசனை: மியான்மர் எல்லையில் ஆய்வு

மோரே, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை எதிர்த்து அங்குள்ள பழங்குடியினர் கடந்த 3-ந் தேதி அமைதி பேரணி நடத்தினர். இதில் வெடித்த கலவரம் படிப்படியாக மாநிலம் முழுவதும் பரவியது. சுமார் ஒரு மாதமாக நீடித்து வரும் இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை சுமார் 80 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அங்கு ராணுவமும், … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்றிரவு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-1, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் தாரோ டேனியலை வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (7-4), 6-2 என்ற … Read more

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ: 3 நோயாளிகள் கருகி பலி

வியன்னா, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது தளத்தில் பிடித்த தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் … Read more

Mahindra Oja tractor launch – மஹிந்திரா ஓஜா டிராக்டர் அறிமுக தேதி வெளியானது

சர்வதேச இலகுரக டிராக்டர் மாடலாக விற்பனைக்கு மஹிந்திரா ஓஜா ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. உலகளாவிய K2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள ஓஜா சப்-காம்பாக்ட் 20-25hp , காம்பாக்ட் (21-30hp), சிறிய பயன்பாடு (26-40hp) மற்றும் பெரிய பயன்பாடு (45-70hp) ஆகியவற்றில் டிராக்டர்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 பிரிவுகளில் 40 மாடல்களுடன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 4 சந்தைகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரேத்தியேகமாக … Read more

எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலை நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை … Read more

“ராம ராஜ்ஜியத்திலேயே தவறு நடந்திருக்கிறது" – சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

“புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புக்கு திரெளபதி முர்மு அழைக்கப்படாதது மட்டும்தான் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு காரணமா?” “அதுமட்டும் காரணம் இல்லை. இப்போது இருக்கிற நாடாளுமன்றத்தில் என்ன குறை இருக்கிறது? பரந்த இடம் இருக்கிறது. அற்புதமான கட்டடம். ஆனால் தன்னுடைய பெயர் வர வேண்டுமென்பதற்காக புதிய கட்டடத்தை மோடி கட்டியிருக்கிறார். அதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.” புதிய நாடாளுமன்றம் – செங்கோல் – பிரதமர் மோடி “சாவர்க்கர் ஒரு சிறந்த தொலநோக்குவாதி, சுதந்திரத்திற்காக சொல்லொணா துயரத்தை அனுபவித்தார் என்று ஆளுநர் … Read more

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து – முதலமைச்சர்

ஜப்பான் நிறுவனங்களுடன் மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும் . இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சுற்று பயணங்களை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் அரசினுடைய குறிக்கோள் என்றார்., முன்னதாக விமான … Read more

ட்விட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் … Read more

‘ஆன்லைன் கேம்ஸ்’ மோகம் – நகை, பணத்துடன் பெங்களூரு ஓடி வந்த உ.பி. சிறுவன்

பிரயாக்ராஜ்: பெற்றோரின் கட்டுப்பாடின்றி ‘ஆன்லைன் கேம்ஸ்’ விளையாடுவதற்காக ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் நகையுடன் பெங்களூரு ஓடிவந்த உ.பி. சிறுவனை போலீஸார் மீட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், ஆன்லைன் விளையாட்டுகளில் நீண்டநேரம் செலவிட்டு வந்துள்ளான். இதை விரும்பாத அவனது பெற்றோர் அவனை கண்டித்தும் தடுத்தும் வந்துள்ளனர். ரூ. 10 லட்சம் நகை: இதனால் வெறுப்புற்ற அச்சிறுவன் கடந்த மே 13-ம் தேதி தனது தாயாரின் லாக்கரில் … Read more