உலக வங்கியின் நிதி உதவியில் ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ செயற்திட்டத்தின் மூலம் மன்னார் சிலாவத்துறை நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட அகத்திமுறிப்பு குளப்புனரமைப்பு வேலைத்திட்டமானது கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் (27) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 442.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படும் குறித்த வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டீமெல்,வவுனியா- மன்னார் பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,முசலி பிரதேசச் செயலகப் பிரதேசச் செயலாளர்,மன்னர் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.