‘தம்பிகிட்ட பேசிக்கோங்க…’ – உதயநிதிக்கு கைமாறும் ‘பவர்’ !
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, எத்தனையோ முறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் நடந்த மாற்றம் குறித்து ரொம்பவே பரபரக்கிறது கோட்டை வட்டாரம்.
டேவிட்சன் மாற்றம் தொடர்பாக தம்மை சந்தித்த சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம், ‘தம்பிகிட்ட பேசிக்கோங்க…’ என ஒற்றைவரியில் முதல்வர் அவர்களைக் கடந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
“இதுவரை அதிகாரிகள் மாற்ற விஷயம் தொடர்பான ‘பவர்’, இந்த முறை உதயநிதி கைக்கு மாறியிருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் அதிகாரிகள்.
‘உதயநிதியின் டீம்’ ஆடுகளத்துக்குள் வந்திருப்பது தொடர்பாக கோட்டைக்குள் புகுந்து ‘என்னதான் நடக்கிறது?’ என விசாரித்ததில்
கிடைத்த தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் கவர் ஸ்டோரியில்…
‘தமிழரல்லாத உயரதிகாரிகள்…’- விமர்சனமும் விளக்கமும்!
தமிழ்நாட்டில், சமீபத்தில் உயர் பதவிகளான தலைமைச் செயலாளர், சட்டம்-ஒழுங்கு டிஜிபி, சென்னை மாநகர கமிஷனர், தலைமைத் தகவல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நியமனம் நடந்தது. இதில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவரும் வேற்று மொழி பேசக்கூடிய வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
உயர் பதவிகள் மற்ற மாநிலத்தவருக்கு சென்றிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக ஆளும் திமுக அரசு மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள், அதற்கு ஆளும் தரப்பில் சொல்லப்படும் விளக்கம் உள்ளிட்டவற்றை படிக்க இங்கே க்ளிக் செய்க…
அண்ணன் ரங்கசாமி… தங்கை தமிழிசை… புதுச்சேரியில் ஒரு சீர்வரிசைச் சிக்கல்!
புதுச்சேரியில் நடைபெற்று வரும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில், முதல்வராக இருக்கிறார் ரங்கசாமி.
ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அரசுக்கு அதிகாரம் இல்லை எனத் தொடர்ச்சியாக பேசி வருகிறார் முதலமைச்சர் ரங்கசாமி.
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
TMB வங்கி மீது ரூ.4,100 கோடி குற்றச்சாட்டு!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனை சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இந்த வங்கி 4,100 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
நவோமி கேம்பல்: 53 வயதில் 2வது குழந்தை!
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடலான நவோமி கேம்பல், தனது 53வது வயதில், இரண்டாவது குழந்தைக்குத் தாயாகி இருப்பதாக, தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஃபேஷன் உலகின் சூப்பர் மாடலாக அறியப்படுவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நவோமி கேம்ப்பெல். இவர் தனது 15வது வயதில் மாடலிங் துறையில் நுழைந்தார்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
வீட்டுக் கடன்: 40 ஆண்டுகள் வசதி யாருக்கு ஏற்றது?
அண்மையில் 40 ஆண்டுக் காலம் வரைக்கும் வீட்டுக் கடனைத் திரும்பக் கட்டும் வசதியை தனியார் நிதி நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
வீட்டுக் கடனை 40 ஆண்டுகளில் கட்டிமுடிக்கும் வசதி யாருக்கு ஏற்றது? இந்த திட்டத்தில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன..?
இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இது குறித்த சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…
விலையேற்றம்… தக்காளி சேர்க்காத ரெசிப்பிகள்!
நம் சமையலில் தக்காளிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. பல வகையான உணவுகளில் தக்காளியும், வெங்காயமும் இடம்பெறாமல் இருக்காது. ஆனால், தக்காளியின் இந்த விலையேற்றத்தில் என்ன சமைப்பது, எப்படிச் சமாளிப்பது எனப் பெண்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
தினமும் செய்யும் உணவு வகைகளில் தக்காளிக்குப் பதிலாக என்னென்ன சேர்க்கலாம்?
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
மிஸ்டர் மியாவ்: கமல் வில்லனாக நடிக்கச் சம்மதித்தது ஏன்?
” ‘எமர்ஜென்சி’ படத்தில் அப்படியே இந்திரா காந்தியைப்போல உருமாறியிருக்கிறார் கங்கனா ரனாவத். ‘இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது நடந்த அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், பெரிய அளவுக்குச் சர்ச்சைகளை உருவாக்கும்’ என்கிறார்கள்.
மேலும்,
* ‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல் வில்லனாக நடிக்கச் சம்மதித்தது ஏன்?,
* சுரேஷ் சங்கையாவின் போராட்டம்
* சமந்தாவின் ‘மலைக்க வைக்கும்’ சம்பளம்
* மறுவாழ்வு சிகிச்சைக்காக கேரளாவுக்குப் பறந்த ஹீரோ
என மிஸ்டர் மியாவ் தரும் சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…