திறன்மிக்க தொழில்முனைவோர்களை அடையாளம் காணும் 12 -வது சின்னிக்கிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள இந்திய தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை கவின்கேர் நிறுவனம் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் உடன் இணைந்து வழங்கி வருகிறது. தொழில் முனைவோரின் தயாரிப்புகள் அல்லது அவர்கள் சேவையின் தனித்தன்மை அடிப்படையிலும், நிலைத்தன்மை மற்றும் சமூக நலன்களைக் கருத்தில் கொண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதில் வெற்றி பெறுவோருக்கு விருதுடன் ரூபாய் 1 லட்ச ரொக்கப்பரிசும் வழங்கப்படும். மேலும் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், நிதி உதவி, வடிவமைப்பு, பேக்கேஜிங், காப்புரிமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை…
2021–2022–ம் நிதி ஆண்டில் 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் வருவாய் ஈட்டியுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த விருதுக்கு https://ckinnovationawards.in– ல் விண்ணப்பிக்கலாம் அல்லது +91-97899 60398 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து தேவையான விவரங்களை வழங்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 15–ந்தேதி ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை கவின்கேர் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குனர் சி.கே. ரங்கநாதனின் தந்தையும், சாச்செட்களின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைந்த ஆர்.சின்னிக்கிருஷ்ணன் பெயரில் வழங்கி வருகிறது. கவின்கேர்–எம்எம்ஏ சின்னிக்கிருஷ்ணன் இன்னோவேஷன் விருது கடந்த 2011–ம் ஆண்டு துவக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல்வேறு பிரிவுகளில் 32-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட்…
கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும்.
இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), சரும பராமரிப்பு (ஃபேர் எவர், ஸ்பின்ஸ்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) Men’s grooming (Biker’s) and D2C Personal Care products (Buds and Berries) ஆகியவை அடங்கும்.
இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப் பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது.
“பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்” என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.
மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (MMA)
மேலாண்மைக் கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு 1956-ம் ஆண்டில் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நிறுவப்பட்டது. இது இன்று 8000-க்கும் அதிகமான கார்பரேட் நிறுவனங்கள், தொழிலகங்கள், தொழில்முறை நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் எக்ஸிகியூட்டிவ்களை தனது உறுப்பினர்களாக கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வில் விருதுகளை கவின்கேர் நிறுவனம் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் உடன் இணைந்து வழங்கிறது என்பது குறிபிடத்தக்கது.