கோவையில் நடுரோட்டில் இழிவாக பேசிய அடாவடி லேடி.. பதிலடி கொடுத்து தெறிக்கவிட்ட தூய்மை பணியாளர்

கோவை: கோவையில் குப்பை வீசிய விவகாரத்தில் நடுரோட்டில் இழிவாக பேசி மிரட்டிய அடாவடி லேடியை “முடிஞ்சா..தூக்குமா!” என தூய்மை பணியாளர் பதிலடி கொடுத்து தெறிக்கவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் குப்பையை நடுரோட்டில் வீசிய பெண, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.இந்த பிரச்சனையை பற்றி பார்க்கும் முன்பு குப்பை தொட்டிகள் குறித்தும், தூய்மை பணியாளர்கள் படும் அவதிகள் பற்றியும் இங்கே பார்த்துவிடுவோம்.

கோவையில் மட்டுமல்ல, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் குப்பைகளை குப்பை தொட்டியில் சரியாக போடுவது குறைவாகவே இருக்கிறது. எங்காவது சாலையோரம் குப்பையை கொட்டி செல்வது அதிகமாக நடக்கிறது. குப்பையை வீதிகள் தோறும் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் கொட்டாமல், காலியிடங்களில் கொட்டுவது அதிகரித்துள்ளது.

குப்பைகளை வாங்க வீடு தேடி குப்பை வண்டியில் வருகிறார்கள். ஆனால் அதில் கொட்டாமல் குப்பைகளை சாலையில் கொட்டுகிறார்கள். குப்பைகளை பிரித்து அனுப்புங்கள் என்று தூய்மை பணியாளர்கள் கேட்பதால், சிலர் குப்பைகளை தூய்மைபணியாளர்களின் வண்டியில் கொட்டாமல், குப்பையை குப்பை தொட்டியில் போய் போடுகிறார்கள். சிலர் தான் குப்பையை சாலைகளில் கொட்டி விடுகிறார்கள். அதை குப்பையை கூட்டுவோர் அள்ளுகிறார்கள்.

குப்பையில் மனித மலம் முதல் மோசமான கழிவுகள் வரை கூட சில சமயங்களில் இருக்கும். அத்தனையையும் கூட்டி அள்ள வேண்டிய நிலைக்கு தூய்மை பணியாளர்கள் தள்ளப்படுகிறார்கள். தூய்மை பணியாளர்களுக்கு நாம் குப்பையை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து இரண்டு குப்பை தொட்டிகளை பராமரித்து கொட்டினால், உண்மையிலேயே நமது நகரங்கள் தூய்மையாக மாறும். அப்படி இல்லாமல் அசுத்தம் செய்தால் நோய்கள் தான் நம்மை தாக்கும்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. கோவையில் வீதிகள் தோறும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.காலை வேளைகளில் வீட்டிற்கே வந்து தூய்மை பணியாளர்கள் குப்பையை வாங்கியும் வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் குப்பையை கொடுப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு சாலையின் ஓரத்திலும், மக்கள் நடமாடும் பகுதிகளிலும் குப்பையை சிலர் கொட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் திருத்தவே முடியாத என்று வேதனையை சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் கேகே புதூர் என்ற பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பையை வீசி செல்கிறார் ஒரு பெண். இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள், கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆத்திரம் அடைந்த பெண், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனை அந்த பகுதியினர் செல்போனில் வீடியா எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, இப்போது அந்த பெண்ணுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.