டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் பந்துவீச்சு தேர்வு

நெல்லை,

8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது . அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ள திருப்பூர் அணி 3-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க மும்முரம் காட்டும். அதேநேரத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ள சேலம் அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழக்க நேரிடும் என்பதால் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.