தங்க மகன் நீரஜ் சோப்ராவின் தொடரும் பதக்க வேட்டை! டயமண்ட் லீக் சாம்பியன் கோல்டன் பாய்

மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் லொசேன் லெக் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில், 87.66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெற்றி பெற்று பட்டம் வென்றார். லாசானேயில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டிகலில், இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா! காயம் காரணமாக ஒரு மாத ஓய்வில் இருந்தாலும், திரும்பி வந்த உடனே நீரஜ் சோப்ரா பட்டம் வென்று சாதனை படைத்தார்

ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ராவின்அபாரமான ஆட்டம் தொடர்கிறது. ஒரு மாத காயம் ஓய்வில் இருந்து திரும்பி வந்த நீரஜ் சோப்ரா, டயமண்ட் லீக்கின் லொசேன் லெக்கில் முதலிடத்தைப் பிடித்தார், இது மதிப்புமிக்க சீசனின் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.03 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும், செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 86.13 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்.

India’s javelin ace Neeraj Chopra wins men’s javelin throw title at Lausanne leg of prestigious Diamond League series; throws 87.66 metres to win the spot.

(File Pic) pic.twitter.com/TXVYk27bg9

— ANI (@ANI) June 30, 2023

25 வயதான சோப்ரா கடந்த மாதம் பயிற்சியின் போது தசைப்பிடிப்பு காரணமாக மூன்று முக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டார், ஆனால் அவர் தனது ஐந்தாவது சுற்றில் 87.66 மீ தூரம் எறிந்து டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார்.

தொடக்கத்தில் ஒரு தவறுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா, பின்னர் 83.52 மீ மற்றும் 85.04 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். அடுத்ததாக 87.66 மீ எறிந்தார். ஆனால், அவர் நான்காவது சுற்றில் மற்றொரு தவறு செய்தார். இறுதியில் ஆறாவது மற்றும் கடைசி சுற்றில் 84.15 மீ. தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றார்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.03 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும், செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 86.13 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

சோப்ரா தனது முதல் டயமண்ட் லீக் பட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வென்றார். ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வியாழன் அன்று மற்றொரு வரலாற்று சாதனையை நிகழ்த்தினார், அவர் இங்கு மதிப்புமிக்க டயமண்ட் லீக் பைனல்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இறுதிப்போட்டியில் டயமண்ட் லீக் கோப்பையை வென்றார். 25 வயதான இந்திய சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் மற்றும் டயமண்ட் லீக் சாம்பியனாக உள்ளார்.

இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி தோஹாவில் நடைபெற்ற சீசன் தொடக்க டயமண்ட் லீக் போட்டியில் இந்திய சூப்பர் ஸ்டார் 88.67 மீ எறிந்து வெற்றி பெற்றார். 
ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் மூன்றாவது சுற்றில் 7.88 மீட்டர் உயரம் தாண்டி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

24 வயதான ஸ்ரீசங்கர், ஜூன் 9 அன்று பாரிஸ் லெக்கில் தனது முதல் டயமண்ட் லீக் மேடையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், இந்த மாத தொடக்கத்தில் புவனேஸ்வரில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் 8.41 மீ. உயரம் தாண்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.