ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஒருபக்கம் விஜய்யின் லியோ படத்தை பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் தளபதி 68 பற்றியும் ரசிகர்கள் ஆர்வமாக பல விஷயங்களை ஆராய்ந்து வருகின்றனர். மே மாதம் திடீரென விஜய் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
அதுவும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் விஜய் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய் நடிப்பது பலரது எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
தள்ளிப்போன தளபதி 68
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் அறிவிப்புடன் சேர்ந்து தளபதி 68 பூஜையும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி தளபதி 68 படத்தின் பூஜை துவங்கவில்லை.
Maamannan: மாமன்னன் மூலம் வடிவேலுவுக்கு அடித்த ஜாக்பாட்..திட்டம் போட்டு காய் நகர்த்திய வைகைப்புயல்..!
ஏனென்றால் தளபதி 68 படத்தின் பூஜை துவங்கி அப்படத்தின் அறிவிப்புகள் வெளியானால் லியோ படத்திலிருந்து ரசிகர்களின் கவனம் தளபதி 68 படத்திற்கு திரும்பும். அது லியோ படத்திற்கு நல்லது இல்லை என்பதை உணர்ந்த தளபதி தற்போதைக்கு தளபதி 68 அறிவிப்புகளை வெளியிட வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார்.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது திரைக்கதையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது தளபதி 68 பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகவுள்ளது. அதாவது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என்றும், இப்படம் அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
காரணமான லியோ
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை வெளியிடவே படக்குழு திட்டமிட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பும், ரிலீஸ் தேதியும் தள்ளிப்போயுள்ளது ரசிகர்கள் சிலரை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இருந்தாலும் நான்கு வருடங்கள் கழித்து விஜய்யின் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகப்போவதை எண்ணி ரசிகர்கள் திருப்தியாக இருக்கின்றனர். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் படம் வெளியானது. அதன் பிறகு தற்போது நான்கு வருடங்களுக்கு பிறகு விஜய்யின் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.