
திருவண்ணாமலையில் ரஜினி சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்து தன்து மூத்த மகள் மற்றும் இயக்குனருமான ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று(ஜூலை 1) காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் ரஜினி. அவரை கண்ட ரசிகர்களும், பக்தர்களும் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.