பொங்கலுக்கு தள்ளிப்போகிறது தங்கலான்?
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு அதன் பிறகு சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்த நிலையில் இப்போது சென்னையில் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர்களே தெரிவித்து வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள் .