மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 33 பயணிகளுடன் சென்ற பேருந்து அதிகாலை 2 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது.
இதில் 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் பாமக? முஷ்டி முறுக்கும் திருமா – ஸ்டாலின் எடுக்கும் இறுதி முடிவு என்ன?
இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த பேருந்தின் ஓட்டுநர், டயர் வெடித்ததால் பேருந்து கவிழ்ந்ததாகக் கூறியுள்ளார்.
போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.