மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 0 முதல் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்த பாவனையாளர்களுக்கு, மின் கட்டணங்களில் இருந்து 65 வீதம் குறைவடையும் என்பதுடன், அலகொன்றின் விலை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்தக் கட்டணம் 400 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைவடையும்.

60 அலகுகளுக்கு குறைவான பாவனையாளர்களுக்கான அலகின் விலை 42 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை குறைவடைவதுடன், மாதாந்தக் கட்டணம் 650 ரூபாவில் இருந்து 300 ரூபா வரை குறைவடையும்.

91 அலகிற்கும் 120 அலகிற்கும் இடையான பாவனையாளர்களுக்கான அலகின் விலை 42 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை குறைவடைவதுடன், மாதாந்தக் கட்டணம் 1500 ரூபாவில் இருந்து 1000 ரூபா வரை குறைவடையும்.

வழிபாட்டுத்தலங்களுக்காக 16 சதவீதக் கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பாவனையைக் கொண்ட வழிபாட்டுத்தலங்களுக்கு அலகுக்கான விலை 30 ருபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைவடையும்.

ஹோட்டல்களுக்கு 26.3 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன், கைத்தொழில் துறைக்கு 9 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 5 சதவீதமும், அரச கட்டிடங்களுக்கு 1 சதவீதமும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.