ஹைதராபாத்: ஆசை ஆசையா முதலிரவு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கொலைவெறியே அவருக்கு வந்துவிட்டது.. அப்படி என்ன நடந்தது?
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவருக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்தனர்.. இந்த நேரம் பார்த்து, யாரோ ஒருவருடன் இளம்பெண் பழக ஆரம்பித்துவிட்டார்.. கடைசியில் கர்ப்பமும் ஆகிவிட்டார்.
விஷயம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும் பதறிப்போய்விட்டனர்.. அதனால், மாப்பிள்ளை தேடும் படலத்தை இன்னும் வேகப்படுத்தினார்கள்.. அவசர அவசரமாக மாப்பிள்ளையை தேடியதில், ஒருவர் சிக்கினார்.. அவர், டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்தவர்.. பெண்ணின் போட்டோவை பார்த்ததுமே இளைஞருக்கு பிடித்துவிட்டது.. அதனால், குடும்பத்துடன், பெண் பார்க்க வந்துள்ளனர்,.
கிட்னி ஸ்டோன்: நேரில் பெண்ணை பார்த்தபோது, வயிறு மட்டும் சற்று பெரிதாக இருப்பதை, மாப்பிள்ளை வீட்டில் கவனித்துள்ளனர்.. அதை பற்றி அப்போதே பெண் வீட்டில் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு, கிட்னி ஸ்டோன் பிரச்சனை இருந்ததாகவும், ஆபரேஷன் செய்ததால்தான், வயிறு பெரிதாக தெரிவதாகவும், இந்த வயிறு வீக்கம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்றும் சொல்லி சமாளித்துள்ளனர்.. இதையும் மாப்பிள்ளை வீட்டினர் உண்மை என்று நம்பிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
கடந்த 26ம் தேதி டெல்லியில் கல்யாணம் ஏற்பாடானது.. இளைஞருக்கும், அந்த கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கும் உறவினர்களும், நண்பர்களும் திரண்டு வந்து, கல்யாணத்தை அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.. திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.. மணப்பெண்ணின் பெற்றோர்களும், ஐதராபாத் கிளம்பி சென்றுவிட்டனர்.
முதலிரவு: திருமணம் முடிந்த அன்றிரவு, புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. மணமகன் ரூமில் காத்திருந்தார்.. மணப்பெண் உள்ளே வந்து உட்கார்ந்தார்.. மணமக்கள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த பெண்ணுக்கு வயிறு வலி வந்துவிட்டது.. வலி பொறுக்க முடியாமல் துடிதுடித்து அழுதார். மாப்பிள்ளைக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பதறினார்.. ஆனால், நேரம் ஆக ஆக, மணப்பெண் வலியால் அலறவே ஆரம்பித்துவிட்டார்..
உடனே மாப்பிள்ளை, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தந்தார்.. பிறகு, எல்லாரும் சேர்ந்து, அந்த பெண்ணை, பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. டாக்டர்களும் அந்த பெண்ணை பரிசோதிக்க உள்ளே அழைத்து சென்றுவிடவும், மாப்பிள்ளை வீட்டினர் ஒன்றுமே புரியாமல் வெளியே நின்றனர்.. சிறிது நேரத்திற்கெல்லாம் டாக்டர்கள் ஓடிவந்து, அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளதாக சொன்னார்கள்.. இதைக்கேட்டு மாப்பிள்ளை ஆடிப்போய்விட்டார்..
போலீசில் புகார்: மொத்த குடும்பமும் திருதிருவென விழித்தது.. அடுத்த சில நிமிடங்களில், மணமகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துவிட்டது.. இதற்கு மேல் பொறுமையிழந்த மாப்பிள்ளை வீட்டினர், மணமகளின் பெற்றோருக்கு போன் செய்து சரமாரியாக திட்டி தீர்த்தனர்.. உடனே, பெண் வீட்டினர், செகந்திராபாத்தில் இருந்து கிளம்பி, நொய்டாவுக்கு ஓடினார்கள்.. மணமகனிடம் எப்படியாவது தன் மகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினார்கள்..
ஆனால், மாப்பிள்ளை வீட்டினர் எல்லாரும் சேர்ந்து, அவர்களை கடுமையாக திட்டி அனுப்பினார்கள்.. அத்துடன், நொய்டாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலும் மணமகனின் குடும்பத்தினர் புகார் தந்துள்ளார்.. போலீசார் இது தொடர்பாக விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
தலையில் இடி: கல்யாணம் ஆன அன்றைக்கே, கல்யாண பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதனிடையே, கோபம் + கடுப்பு + ஆத்திரம் + எரிச்சல் என, உச்சக்கட்டமாய் நொந்து போய் உள்ளாராம் மாப்பிள்ளை..!!