
ஸ்பை படத்தின் முதல் நாள் வசூல் இதோ
கேரி பி.ஹெச் இயக்கத்தில் தெலுங்கில் நடிகர் நிகில் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஸ்பை. ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈ.டி என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவில் உள்ள ரகசியங்கள் பற்றிய பின்னணியில் ஆக்ஷன் ஸ்பை திரில்லர் படமாக வெளிவந்துள்ளது. நேற்று இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 11.70 கோடியை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.