கொழும்பு,-உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, இலங்கை பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.
இதையடுத்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் வழங்கியது.
இதற்கு, உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது உள்ளிட் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை பார்லி.,யின் சிறப்பு கூட்டம் நடந்தது. அப்போது, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு, 122 எம்.பி.,க்கள் ஆதரவாக ஓட்டளித்த நிலையில், இந்த மசோதா நிறைவேறியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement