ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தனுஷ், அமலா பால் உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள் தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரெட் கார்டுதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தேனாண்டாள் முரளி தலைமையிலான நிர்வாகத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த பொது குழுவில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.
சிம்புஅதில் முதல் கட்டமாக சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, விஷால், யோகி பாபு மற்றும் அதர்வா ஆகிய 5 பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது. இவர்கள் தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுவிட்டு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்பட்டது. வேல்ஸ் பிலிம்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தனுஷ்இந்த லிஸ்ட்டில் மேலும் பல திரையுலக பிரபலங்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அமலா பால், லட்சுமி ராய் போன்ற நடிகைகளின் பெயர்களும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் மீது புகார்தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தாராம். அனால் ஒரு சில காரணங்களால் அந்தப்படம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தை தற்போது தனுஷ் மீண்டும் நடித்து தர வேண்டும் என தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக நடிகர் சங்க நிர்வாகிகளிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப்படத்திற்காக நடிகர் தனுஷ் 20 கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திரையுலகில் பரபரப்புமேலும், நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட 14 பேரிடமும் ஒரு வாரத்திற்குள் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தனுஷ், அமலா பால் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.