ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். மேலும் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இதுதவிர ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது
தலைவரின் நம்பிக்கைசமீபகாலமாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ஜெயிலர் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார் தலைவர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் முழு படத்தையும் போட்டு பார்த்த தலைவருக்கு முழு திருப்தியாம். இப்படத்தை பார்த்த பிறகு, தான் எதிர்பார்த்த வெற்றியை ஜெயிலர் திரைப்படம் கொடுக்கும் என்ற நம்பிக்கை ரஜினிக்கு பிறந்துள்ளதாம். இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றார் தலைவர் இதைத்தொடர்ந்து புது உத்வேகத்துடன் ரஜினி தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். தற்போது ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி
ப்ரோமோஷன்ஸ்இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கையில் விரைவில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அதையடுத்து நெல்சனின் ஸ்டைலில் புது புது ப்ரோமோஷன்களை நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. பொதுவாக நெல்சன் தன் படங்களின் ப்ரோமோஷன்களை வித்யாசமாக செய்வார். டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களின் ப்ரோமோஷன்களை வித்யாசமாக செய்து ரசிகர்களை ஈர்த்தார் நெல்சன். அதைப்போல தற்போது ஜெயிலர் படத்திற்கும் அவரது ஸ்டைலில் ப்ரோமோஷன்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது
ப்ரோமோஇந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வெளியீடு எப்போது என்ற அறிவிப்பை ஜூலை 2 ஆம் தேதி படக்குழு வெளியிடவுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை நெல்சன் அவரது ஸ்டைலில் ஒரு ப்ரோமோவாக வெளியிடுவார் என எதிர்பார்க்கின்றனர். எப்படி டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களுக்கு வித்யாசமான ப்ரோமோ ஒன்றை நெல்சன் வெளியிட்டாரோ அதே போல ஜெயிலர் படத்திற்கும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பீஸ்ட் ப்ரோமோவில் விஜய் போனில் பேசியதை போல ஜெயிலர் ப்ரோமோவில் ரஜினி இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ப்ரோமோவில் நடிக்கவில்லை என்றாலும் ரஜினியின் குரலாவது ப்ரோமோவில் இடம்பெறும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது