மும்பை: ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது ஜவான்.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியா மணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜூன் 2ல் வெளியாகவிருந்த ஜவான், செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ஜவான் படத்துக்கு 1500 கோடி ரூபாய் டார்க்கெட் பிக்ஸ் செய்துள்ளாராம் ஷாருக்கான்.
அட்லீக்கு 1500 கோடி ரூபாய் டார்க்கெட் கொடுத்த ஷாருக்: ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது. செம்ம ஆக்ஷன் திரைப்படமாக உருவான பதான் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. பதான் படத்திற்கு எதிராக பாய்காட் பிரச்சாரங்கள் செய்யப்பட்ட போதும், பாக்ஸ் ஆபிஸில் ரியலான சம்பவம் செய்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது ஜவான் திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. முதன்முறையாக பாலிவுட் சென்றுள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அட்லீக்கு இதுதான் முதல் படம் என்பதால் தனது உயிரை கொடுத்து வேலை பார்த்து வருகிறாராம். அதேநேரம் ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்த ஜவான், செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் சொந்தமாக தயாரித்து வரும் ஜவான் படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இதனால் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே 200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளாராம் அட்லீ. அதுதவிர ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே பல கோடி பட்ஜெட் போட்டுள்ளார்.
இதன் காரணமாக ஜவான் படம் 1500 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என இயக்குநர் அட்லீக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் ஷாருக்கான். அட்லீயும் ஜவான் திரைப்படம் கண்டிப்பாக 1500 கோடி வசூலிக்கும் என ஷாருக்கானுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளாராம். மேலும், ஷாருக்கானுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக செம்மையான டீசரையும் போட்டுக் காட்டியுள்ளார் அட்லீ. இதனைப் பார்த்த ஷாருக்கான் சியர்ஸ் அடித்து அட்லீயை பாராட்டியுள்ளாராம்.
இந்நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து விரைவில் டீசரை வெளியிடவும் அட்லீ பிளான் செய்துள்ளாராம். அதன்படி ஜூலை 7ம் தேதி ஜவான் டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ஜூலை 7ம் தேதி டீசர் வெளியானதும், அதனைத் தொடர்ந்து சில தினங்களில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிளும் ரிலீஸாகவுள்ளதாம்.
ஜவான் படத்திற்காக அட்லீ, ஷாருக்கான் ஆகியோருடன் முதன்முறையாக இணைந்துள்ளார் அனிருத். இதனால், ஜவான் பாடல்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ஷாருக்கான் எதிர்பார்த்தபடி ஜவான் 1500 கோடி வசூலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.