ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக முடிவடைந்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை குறுகிய காலகட்டத்திற்குள் அசால்டாக எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் லோகேஷ் எடுத்து முடித்துள்ளார்.
இது கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள், இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரைப்படம் என அனைத்தும் இருந்தாலும் மிகவும் கூலாக படப்பிடிப்பை நடத்தி முடித்த லோகேஷை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் காஷ்மீர்
இந்நிலையில் லியோ படத்தில் இருந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இருந்தாலும் சில சர்ச்சைகளில் இப்பாடல் சிக்கியது. இப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போல நடித்ததும் ,பாடலில் இடம்பெற்ற சில வரிகளும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Maamannan: மாமன்னன் மூலம் வடிவேலுவுக்கு அடித்த ஜாக்பாட்..திட்டம் போட்டு காய் நகர்த்திய வைகைப்புயல்..!
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இப்பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தாலும் இன்னும் patch ஒர்க் எடுக்கப்பட இருக்கின்றதாம். அதன் காரணமாக லோகேஷ் உட்பட லியோ படக்குழு மீண்டும் காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் கடுமையான குளிரில் லியோ படம் படமாக்கப்பட்டது. இதையடுத்து படக்குழு காஷ்மீரில் சந்தித்த சவால்களை பற்றி ஒரு வீடியோவாகவே வெளியிட்டது.
ஷாக்கான விஜய்
இதைப்பார்த்த விஜய் இனி அவுட் டோர் படப்பிடிப்பு வேண்டாம் என்றும், செட்டிலேயே படமாக்கலாம் என்றும் கூறியுள்ளார். எனவே தான் லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது ஒரு சில நாட்களுக்கு மட்டும் லியோ படக்குழுவை சேர்ந்த சிலர் காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் விஜய் படக்குழுவுடன் காஷ்மீருக்கு செல்லவில்லையாம். ஒரு சில நடிகர்களே காஷ்மீருக்கு patch ஒர்க்கிற்காக செல்ல இருக்கிறார்களாம்.இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.