விஜய் நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனிடையில் ‘லியோ’ படம் குறித்து ஒவ்வொரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இந்தப்படம் குறித்து கெளதம் மேனன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசியான இயக்குனராக மாறிவிட்டார். இவரது படங்களுக்கு கோலிவுட் சினிமாவில் பல மடங்கு மவுசு கூடிவிட்டது. இதனாலே முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைந்ததில் இருந்து இதுவரை ஒரு பிளாப் படம் கூட கொடுக்காமல் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தற்போது இவரது இயக்கத்தில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் முதன்முறையாக விஜய், கெளதம் மேனன் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இயக்குனரான கெளதமின் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள தனது கேரக்டர் குறித்து கெளதம் மேனன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், லோகேஷ் கனகராஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் என்னுடைய பேவரைட் திரிஷாவும் நடிக்கிறார். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வருவதை போன்ற காட்சிகள் படத்தில் உள்ளது.
Tamanna: படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும்போது.. ஓபனாக பேசிய நடிகை தமன்னா.!
என்னுடைய கேரக்டர் பெயர் ‘J’ வில் துவங்கும். இந்தப்படத்தில் எனக்கு பல ரோல் இருக்கு. வில்லன், நண்பன், பின்னணியில் இருக்கும் ஒரு ஆள் என மூன்று விதமான ரோல் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தனது கேரக்டர் படத்தில் வெயிட்டாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோவில் இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். மாஸ்டரை போல் இல்லாமல் இந்தப்படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அண்மையில் ‘லியோ’ படத்திலிருந்து அனிருத் இசையில் விஜய் பாடி வெளியான ‘நா ரெடி’ பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவா.. ?: ஏடாகூடமான கேள்விக்கு அசராமல் பதிலளித்த பிக்பாஸ் சனம்.!