சென்னை: மாமன்னன் படத்தில் ஏகப்பட்ட நிகழ்கால அரசியல் குறீயிடுகளை உதயநிதி ஸ்டாலினுக்கே தெரியாமல் மாரி செல்வராஜ் வைத்துள்ளார் என அதிமுகவினர் ஏகப்பட்ட மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படம் ஃபர்ஸ்ட் சூப்பர் செகண்ட் ஹாஃப் சுமார் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
அதிமுகவினர் திமுகவுக்கு எதிராக இந்த படம் இருப்பதாகவும், திமுகவினர் அதிமுகவுக்கு எதிராகத்தான் இந்த படம் உள்ளதாகவும் மாறி மாறி ட்ரோல்களையும் மீம்களையும் பதிவிட்டு நெட்டிசன்களை ஹேப்பியாக்கி உள்ளனர்.
திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர்: உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்டுக்கு கீழ் அதிமுகவினர் ஏகப்பட்ட மீம்ஸையும் ட்ரோல்களையும் பதிவிட்டு வருகின்றனர். தில்லுக்கு துட்டு.. யோவ் மாரிண்ணா.. நீ வேற ரகம்ணா என கமெண்ட் போட்டு பகத் ஃபாசில் படத்தில் பட்டியலின எம்எல்ஏ ஒருவருக்கு பிளாஸ்டிக் சேர் போட்டு உட்கார வைக்கும் காட்சியையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து இருக்கும் காட்சியையும் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதிமுகவுக்கு கிரெடிட்: உதயநிதி ஸ்டாலின் பல கோடி செலவு செய்து மாமன்னன் படத்தில் நடித்த நிலையில், படத்தில் பார்த்தால் வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் கிரெடிட்டை எடுத்துக் கொள்ள, அதிமுக அமைச்சரும் முன்னாள் சட்டப் பேரவைத் தலைவருமான தனபால் தான் ரியல் மாமன்னன் என ஒட்டுமொத்த கிரெடிட்டும் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சென்று விட்டது.
அவன் பொருள எடுத்து: அதிமுகவினரின் புகழை பரப்ப உதயநிதி ஸ்டாலின் பெரிய மனதுடன் பல கோடி செலவு செய்து மாமன்னன் படத்தை எடுத்துள்ளாரா? அல்லது மாரி செல்வராஜ் உதயநிதிக்கே தெரியாமல் இப்படியொரு கதையை படமாக்கி “அவன் பொருளையே எடுத்து அவனை போட்டுவிட்டாரா” என நெட்டிசன்கள் மீம்ஸா போட்டுத் தாக்கி வருகின்றனர்.
இந்த ஷாட் தான்: லீலா என்கிற பெயரில் கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொண்டு நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரமும் அதே பெயரில் தற்கொலை செய்துக் கொண்ட கம்யூனிஸ்ட் கதாபாத்திரமா மாரி செல்வராஜ் என்றும், இந்த படத்தை பார்க்கும் போது இந்த ஷாட் தான் ஞாபகத்துக்கு வருது என உதயநிதியை மாரி செல்வராஜ் வச்சு செஞ்சிருக்கிறார் என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.