ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலு தன் அடுத்த இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என சொல்லலாம். பல படங்கள் அவரின் நகைச்சுவைக்காகவே வெள்ளி விழா கண்டுள்ளன. ஆனால் இடையில் சில பல காரணங்களால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
பின்பு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து ஹீரோவாக சில படங்களில் நடித்தார். அது அவருக்கு கைகொடுக்கவில்லை. பின்பு சில சர்ச்சைகளில் சிக்கி ஒருவழியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் வடிவேலு. ஆனால் அப்படத்தை ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
Maamannan: அஜித்,விஜய்க்கு நிகரான ஓப்பனிங்..மாமன்னன் மூலம் மாஸ் காட்டிய உதயநிதி..முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவா ?
இதைத்தொடர்ந்து இனி வடிவேலு அவ்வளவுதான் என சிலர் பேசி வந்த நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்துள்ளார் வைகைப்புயல். யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் அழுத்தமான சீரியஸான ரோலில் மாமன்னன் படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார் வடிவேலு.
மாமன்னனாக வடிவேலு
அதன் பலனை தற்போது அவர் அனுபவித்து வருகின்றார். படம் பார்த்த அனைவரும் வடிவேலுவுக்கு கண்டிப்பாக மாமன்னன் படத்தின் மூலம் பல விருதுகள் கிடைக்கும் என பேசி வருகின்றனர். இந்நிலையில் வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் மாஸ்டர் பிளான் போட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.
அதாவது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை அடுத்து வடிவேலுவின் கைவசம் மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 படங்கள் மட்டுமே தான் இருந்தது. வேறெந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்தார் வடிவேலு. ஏனென்றால் மாமன்னன் திரைப்படம் வெளியானால் தன் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்கும் என நினைத்த வடிவேலு மாமன்னன் பட வெளியீட்டிற்கு பிறகு மற்ற படங்களில் கமிட்டாகலாம் என நினைத்தார்.
அதன் படி மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலுவின் மார்க்கெட் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர தற்போது மளமளவென பல படங்களில் கமிட்டாகிவருகின்றார் வடிவேலு. மேலும் அவரை தேடி நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களும் வருகின்றதாம்.
மாஸ்டர்பிளான்
இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் வெற்றியால் தன் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளாராம் வடிவேலு. மாமன்னன் படத்திற்கு பிறகு மற்ற படங்களில் கமிட்டானால் தன் சம்பளம் கண்டிப்பாக உயரும் என திட்டம்போட்ட வடிவேலுவுக்கு அவரின் மாஸ்டர் பிளான் ஒர்கவுட் ஆகியுள்ளதாம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
எனவே மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலு போட்ட கணக்கு ஒர்கவுட் ஆகியுள்ளதை அடுத்து கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் தன் ஆட்டத்தை துவங்க வைகைப்புயல் தயாராகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.