நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளர் மாருதி சுசூகி நிறுவனம் ஜூன் 2023-ல் 133,027 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் 2022 (122,685) விற்பனையை விட 8% வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் சிறிய ரக கார் (ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன்ஆர்) விற்பனை தொடர்ந்து சரிவடைந்துள்ள நிலையில் எஸ்யூவி சந்தை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது.
Maruti Suzuki Sales Report – June 2023
மாருதி சுசூகி எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக ஃபிரான்க்ஸ், எர்டிகா, பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எஸ்-கிராஸ், XL6 மாடல்கள் 43,404 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது. இது வலுவான 28% ஆண்டு வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2023) 414,055 எண்ணிக்கை விற்பனை Q2 CY2022 உடன் ஒப்பீடுகையில் 369,154 எண்ணிக்கையை விட 12% அதிகமாகும், அதே சமயம் Q1 CY2023 இன் 427,578 எண்ணிக்கையை ஒப்பீடும்போது 13.66% குறைந்துள்ளது.
முந்தைய மே 2023 மாதத்துடன் ஒப்பீடுகையில், கார் விற்பனை 7.43 சதவிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மாருதி, சில எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதனால் மட்டும் விற்பனை எண்ணிக்கை பாதிப்படைந்துள்ளது.