வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: தற்போதைய சூழ்நிலையில் ராகுலின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுகிறேன் எனவும், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும் மணிப்பூர் மாநில பாஜ., தலைவர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூக மக்களிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இங்கு, மே 3ம் தேதி முதல் வன்முறை அதிகரித்து வருகிறது. இதுவரை ஏற்பட்ட கலவரத்தில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
ராகுலின் மணிப்பூர் பயணம் குறித்து, அம்மாநில பாஜ., தலைவர் சாரதா தேவி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தற்போதைய சூழ்நிலையில் ராகுலின் பயணத்தை நான் பாராட்டுகிறேன். எவ்வாறாயினும், நிலைமையைத் தீர்த்து அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனக் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது: மணிப்பூர் மக்கள் முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். மாநிலத்தில் நிலவி வரும் ‘நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் முதல்வருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். மாநிலத்தின் தற்போதைய நிலைமை முந்தைய அரசின் செயல்களின் விளைவுதான்’ என காங்கிரஸ் சுட்சி குறித்து குற்றம் சாட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement