தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் மயில்சாமி. பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் மயில்சாமியின் மறைவிற்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்தனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை. அதை விரைவில் நிறைவேற்றுவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலையில் உள்ள ரஜினி, இன்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இதனையடுத்து ரஜினி மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றி விட்டதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். ‘ஜெயிலர்’ படத்தினை தொடர்ந்து ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘ஜெயிலர்’ பர்ஸ்ட் சிங்கிளுக்காக வேற மாதிரி யோசித்த நெல்சன்: தலைவர் ஆட்டம் ஆரம்பம்.!
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதனையடுத்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
‘ஜெய் பீம்’ பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் போலி என்கவுண்டர் குறித்து பேசும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. லைகா நிறுவனம் இந்தப்படத்தினை தயாரிக்கவுள்ளது. ‘லால் சலாம்’ படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து ‘தலைவர் 170’ பட வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamanna: படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும்போது.. ஓபனாக பேசிய நடிகை தமன்னா.!