சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சனம் ஷெட்டி 2012 இல் வெளியான ‘அம்புலி’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் அவர் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், செல்வந்தன்,கதகளி, வால்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
காதல் சர்ச்சை: ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனை காதலித்ததாகவும், இருவருக்கும் இடையே ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார்.
புயலை கிளப்பிய பிரச்சனை: இதற்கு பதில் அளித்த தர்ஷன், சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில்: இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த வீட்டில் பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி சண்டை முட்டிக்கொண்டு அந்த வீடே ரணகளமானது. இருப்பினும் சனம் ஷெட்டிக்கு மக்களின் ஆதரவு இருந்தததால் அந்த வீட்டில் 63 நாட்கள் இருந்தார்.
செருப்படி பதில்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரீலிஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஒரு க்யூட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவர், உங்களுக்கு அங்குளில் ஷேவ் பண்ணி விடுவது யார் என கேட்டுள்ளார். இந்த கமெண்டைப்பார்த்து கடுப்பான சனம் ஷெட்டி, “ஜில்லெட்னு ஒருத்தர்” என செருப்படி பதில் அளித்துள்ளார்.