கடந்த சில மாதங்களாகவே தமன்னா பரபரப்பு நடிகையாகி விட்டார். அதற்கு காரணம் முத்தக்காட்சியில் கூட நடிப்பதற்கு மறுத்த அவர் தற்போது படுக்கையறை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து அதிர்ச்சி அளித்தார். இதுக்குறித்து அவர்மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு கலைஞனாக என் வேலையை தான் நான் செய்கிறேன் என பதிலடி கொடுத்து வருகிறார் தமன்னா.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அண்மையில் அருணிமா ஷர்மா இயக்கத்தில் ‘ஜீ கர்தா’ என்ற வெப்சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப்சீரிஸில் தான் தமன்னா மேலாடையின்றி உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து சர்ச்சைகளை கிளப்பினார். தமன்னாவின் எல்லைமீறிய இந்த கிளாமரை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகினர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே தமன்னா நடிப்பில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப் தொடர் கடந்த வாரம் வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதில் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சி என மிரட்டியிருந்தார் தமன்னா. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு, தற்போது அவரே அதனை மீறிவிட்டதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள தமன்னா, ‘2023 லும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மற்றவர்கள்செல்வது ஏன்? என்னைப்பற்றி கேலி, கிண்டல் செய்பவர்களை நான் கண்டுகொள்ளப் போவதில்லை.
எனது 18 வருட திரையுலக வாழ்க்கையில் முத்தம் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விதிகளை நான் போட்டுக் கொண்டது உண்மைதான். ஆனால் அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த விதிகளை மீற வேண்டும் என எனக்கு புரிந்தது. அதனால் தான் நான் போட்ட விதிகளை மீறி நடித்தேன் என தெரிவித்துள்ளார்.
Maamannan:’மாமன்னன்’ படம் இவரைப்பற்றிய நிஜ கதையா.?: தீயாய் பரவும் தகவல்.!
மேலும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ குறித்தும் பேசியுள்ள தமன்னா, இந்த தொடரில் நான் நடித்த சில காட்சிகள் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே என்னுடைய பயணம் இருக்கும். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ தொடரில் இடம்பெற்றுள்ள படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும் பொது சிரமமாகத்தான் இருந்தது.
அதே போல் அந்த காட்சிகளை படமாக்கும் போதும் படபடப்புடன் அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் ஒரு கலைஞனனாக என்னுடைய வேலையை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் பேசியுள்ளார் நடிகை தமன்னா.
Captain Miller: ரியல் வெறித்தனம்.. தீயாய் இருக்கு: கேப்டன் மில்லராக மிரட்டும் தனுஷ்.!