அமலுக்கு வந்தது வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு!
தமிழ்நாட்டில் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது. வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும் எனவும் கைத்தறி விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.