உளவுத்துறை டீலிங்… மிஸ்ஸான டேவிட்சன் கணக்கு… இனிமே சங்கர் ஜிவால் தான்… புது ரூட்டில் ஸ்டாலின்!

ஜூலை 2023 பிறந்துவிட்டது. தமிழக அரசின் நிர்வாகத்திற்கு புது ரத்தமும் பாய்ச்சப்பட்டுள்ளது. ஏனெனில் தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் சாய் ரத்தோர் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு மற்றும் எதிர்க்கட்சிகள், அரசியல் இயக்கங்கள், சமூக விரோதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ரகசியமாக கவனித்து அரசை உஷார்படுத்தும் உளவுத்துறையை மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிடப்பில் போட்டுள்ளார்.

உளவுத்துறை ஏடிஜிபிஏற்கனவே ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்-ஐ சென்னை தலைமையிட ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்துவிட்டு, தற்போதைய ஐஜி செந்தில்வேலன் கூடுதல் பொறுப்பாக உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கவனிப்பார் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறைக்கு சரியான நபரை நியமிக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இப்படி செய்துவிட்டார்? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.சூடுபிடிக்கும் தேர்தல் களம்​ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டணி பற்றி காலம் தான் முடிவு செய்யும்​​டேவிட்சன் தவறவிட்ட விஷயங்கள்இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கும் போது, உளவுத்துறை தலைமையால் இதுவரை பட்டது போதும். வெடித்த சர்ச்சைகளை சொல்லி மாளாது. சிறிது நாட்கள் இப்படியே போகட்டும். அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்ற வகையில் பதிலளித்தனர். சரி அப்படி என்ன தான் விவரம் என்று அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேள்வி எழுப்பினோம். மிகவும் நம்பிக்கைக்கு உரிய நபர் என்ற அடிப்படையில் தான் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்க்கு உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டது.
சபரீசன் பாலிடிக்ஸ்இதன் பின்னணியில் சபரீசனின் லாபி இருப்பதையும் மறுக்க முடியாது. இதனால் மதுரை காவல் ஆணையராக இருந்த போது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு விஷயத்தை கூட பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சரியான நேரத்தில் தகவல்களை கொண்டு செல்வதில் பலமுறை தவறவிட்டு விட்டாராம்.
கனியாமூர் கலவரம்இதுதொடர்பாக லிஸ்ட் போட்ட அரசியல் பார்வையாளர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினர், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம், கோவை கார் குண்டுவெடிப்பு பின்னணி நபரை கண்காணிக்க தவறியது, ஓசூரில் நடந்த திடீர் சாலை மறியல் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணிக்க தவறி விட்டதாக கூறுகின்றனர்.
​டென்ஷனான மு.க.ஸ்டாலின்இதில் பல விஷயங்களில் நடந்த தவறுகளை முதலமைச்சரின் காதுகளுக்கு செல்லாமல் பார்த்து கொண்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து நடந்த அமலாக்கத்துறை ரெய்டு, எதிர்பாராத கைது நடவடிக்கை போன்றவற்றிலும் உளவுத்துறை கோட்டை விட்டது ஸ்டாலினின் கோபத்தை அதிகரித்துவிட்டதாம். இதற்கிடையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியை குறிவைத்து டேவிட்சன் காய் நகர்த்திய சம்பவமும் சலசலப்பை ஏற்படுத்தியது.
​ஐஜி செந்தில்வேலன் கையில் பொறுப்புஇந்நிலையில் தான் சங்கர் ஜிவால் மாற்றத்திற்கு முன்பாக டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றத்தை கச்சிதமாக ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். தற்போது உளவுத்துறை ஏடிஜிபியாக புதிதாக யாரையும் நியமிக்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லையாம். அதை கூடுதல் பொறுப்பாக ஐஜி செந்தில்வேலன் கைகளில் ஒப்படைத்து விட்டார். அதேசமயம் டிஜிபி சங்கர் ஜிவால் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பார் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.
இனி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தான்அது முழுவதும் உறுதியாகும் பட்சத்தில் அவரை வைத்தே உளவுத்துறை செயல்பாடுகளையும் முடுக்கி விட ஒரு பிளானும் இருக்கிறதாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் உளவுத்துறை தவறவிட்ட பல விஷயங்கள் அரசியல் ரீதியாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதுபோல் மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? சங்கர் ஜிவால் அஸ்திரம் சரியாக வேலை செய்யுமா? போன்றவற்றை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.