சிவ் தாஸ் மீனா இடத்தை பிடிச்ச டி.கார்த்திகேயன் ஐஏஎஸ்… உயர்கல்வி டூ நகராட்சி நிர்வாகம்!

தமிழக அரசில் நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். இதன் தொடக்கம் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மாற்றத்தில் தொடங்கியது. இவர் ஓய்வு பெறுவதால் புதிதாக சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதன்பிறகு தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

​சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் உத்தரவுஇந்த வரிசையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் ஆகியவற்றை வழங்கி தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் முக்கியமான அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில், உயர்கல்வி துறை முதன்மை செயலாளராக இருந்த டி.கார்த்திகேயன் ஐஏஎஸ் தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீண்டும் வெடித்த மோதல்​மீண்டும் தொடங்கிய ஆளுநர்-முதலமைச்சர் மோதல்​​டி.கார்த்திகேயன் ஐஏஎஸ்​ பணியிடமாற்றம்முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையை சிவ் தாஸ் மீனா வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது இடத்தை தான் தற்போது டி.கார்த்திகேயன் ஐஏஎஸ் பிடித்துள்ளார். இதை வைத்து இவரது ஐஏஎஸ் வாழ்க்கை இனிமேல் ஏறுமுகம் தான் சக அதிகாரிகள் கூறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இவரது பின்னணி குறித்த தேடல் அதிகரித்துள்ளது.
1997 ஐஏஎஸ் பேட்ச்டி.கார்த்திகேயன் ஐஏஎஸ் 1997 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோக கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட துறைகளின் செயலாளராக பதவி வகித்தார்.
சென்னை மாநகராட்சி டூ நெடுஞ்சாலைத் துறை2019 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக பதவி வகித்துள்ளார். 2021ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளராக இருந்த டி.கார்த்திகேயன் ஐஏஎஸ், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2 நாட்களில் நடந்த மாற்றம்ஆனால் இரண்டே நாட்களில் உயர்கல்வித் துறை செயலாளராக மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், சென்னை மாநகராட்சி டெண்டர் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் 740 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர்இத்தகைய சூழலில் திமுக ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத் துறையை ஏன் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அறப்போர் இயக்கமும் வலுவாக எதிர்க்குரல் எழுப்பியது. இவ்வாறு அரசுக்கு பல தரப்பில் இருந்து வந்த நெருக்கடியால் இரண்டே நாட்களில் நெடுஞ்சாலைத் துறையில் இருந்து உயர்கல்வி துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.