டிவிட்டரின் அடுத்த அதிர்ச்சி… புதிய கட்டுப்பாடுகள்.. எலன் மஸ்க்கின் அடடே காரணம்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
டிவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எலன் மஸ்க்உலக அளவில் பிரபலமான டிவிட்டர் தளத்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். எலன் மஸ்க் டிவிட்டர் உரிமையாளர் ஆன பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி டிவிட்டரில் ப்ளூ டிக் பெற மாதம் தோறும் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

​ நீலகிரி, கேரளா போறீங்களா? மிகப்பெரிய சம்பவம் இருக்கு… வேண்டாம்… எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!​டிவிட்டர்அதனை தொடர்ந்து டிவிட்டரில் எடிட் செய்யும் வசதி நடைமுறைக்கு வந்தது. டிவிட்டரில் ப்ளூ டிக் பெற்ற பயனாளர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என்றும், டிவீட் செய்து 30 நிமிடங்களுக்குள் அதனை எடிட் செய்து கொள்ளலாம் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அந்த வசதி 30 நிமிடங்களில் இருந்து 60 நிமிடமாக உயர்த்தப்பட்டது. மேலும் 5 முறை எடிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

​ உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டிவிட்டர்… ஏன் தெரியுமா? எலன் மஸ்க் விளக்கம்!​மாற்றங்கள்மேலும்10 ஆயிரம் கேரக்டர்களின் ஒரு டிவீட் செய்ய முடியும் என்ற அறிவிப்பும் வெளியானது. டிவிட்டரின் சில மாற்றங்களுக்கு வரவேற்பும் சில மாற்றங்களுக்கு எதிர்ப்பும் எழுந்து வந்தன. இந்நிலையில் டிவிட்டரில் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் அதன் உரிமையாளரான எலன் மஸ்க். அதன்படி சந்தா செலுத்திய Verified ccounts எனும் அதிகாரப்பூர்வ பயனாளர்கள் நாளொன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
​ ஆரஞ்ச் அலர்ட்… சென்னை வானிலை மையம் வார்னிங்… நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?​புதிய கட்டுப்பாடுகள்சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை பயன்படுத்தும் Unverified பயனாளர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும், மேலும் புதிதாக டிவிட்டருக்கு வருபவர்கள் நாளொன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலன் மஸ்க்கின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

​ ப்பா… காந்த பார்வை… அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்த ரஜினிகாந்த்!​எலன் மஸ்க் விளக்கம்டிவிட்டர் சேவையை முழுமையாக பெற சந்தா செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த புதிய View Limit குறித்து எலன் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி நாம் அனைவரும் டிவிட்டர் அடிமைகளாக இருப்பதாகவும் நாம் வெளியில் போகவேண்டும் என்பதாலும் இந்த View Limit கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

​ அச்சச்சோ… வங்கக்கடலில் சுழற்சி.. மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை.. சம்பவம் இருக்காம்!​டைமிங் டிவிட்மேலும் தான் இந்த உலகிற்கு ஒரு நல்ல செயலைச் செய்திருப்பதாகவும், தன்னுடைய இந்த டிவிட்டை பார்த்ததன் மூலம் நீங்கள் இப்போது மற்றொரு வியூவை பயன்படுத்திவிட்டீற்கள் என்றும் டைமிங்காக டிவிட்டியுள்ளார் எலன் மஸ்க். இருப்பினும் எலன் மஸ்க்கின் இந்த கட்டுப்பாடுகள் டிவிட்டர் சமூக வலைதளத்திற்கு நல்லதாக இருக்காது என டிவிட்டர் பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ​ இறையன்புவை மிஸ் பண்ண யாருக்குதான் மனசு வரும்? கொக்கி போடும் அன்புமணி ராமதாஸ்!

மேலும் தான் இந்த உலகிற்கு ஒரு நல்ல செயலைச் செய்திருப்பதாகவும், தன்னுடைய இந்த டிவிட்டை பார்த்ததன் மூலம் நீங்கள் இப்போது மற்றொரு வியூவை பயன்படுத்திவிட்டீற்கள் என்றும் டைமிங்காக டிவிட்டியுள்ளார் எலன் மஸ்க். இருப்பினும் எலன் மஸ்க்கின் இந்த கட்டுப்பாடுகள் டிவிட்டர் சமூக வலைதளத்திற்கு நல்லதாக இருக்காது என டிவிட்டர் பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.​வியூ லிமிட்​​​காரணம்​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.