நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக கௌரவ டிரான் அலஸ் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, கௌரவ புத்திக பத்திறண, கௌரவ (வைத்திய கலாநிதி) கயாஷான் நவனந்த, கௌரவ துஷார இந்துனில் அமரசேன, கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ தவராஜா கலை அரசன் மற்றும் கௌரவ மஞ்சுலா திசாநாயக ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.