மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பணிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3-வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

இதேபோல், உச்ச நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன், ஐஸ்வர்யா பட்டி ஆகியோருக்கும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.