லுலு இறக்கும் 10,000 கோடி ரூபாய்… மால் மட்டுமில்ல… பெருசா வரப் போகுது… அடுத்த நகரம் இதுதான்!

லுலு என்றாலே பிரம்மாண்ட மால் தான் நினைவுக்கு வரும். இதை லுலு ஹைபர் மார்க்கெட் என்று அழைக்கின்றனர். கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ, கோவை நகரில் வசிப்பவர்களை கேட்டுப் பாருங்கள். அப்படியே திக்குமுக்காடி போன அனுபவங்களை கொட்டி தீர்ப்பர். லுலு ஹைபர் மார்க்கெட்டை One Stop Shopping எனச் சொல்லலாம்.

​லுலு ஹைபர் மார்க்கெட்இதில் சில்லறை விற்பனை கடைகள், மொத்த விற்பனை கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு, புத்துணர்ச்சி மையங்கள், வளைகுடா நாடுகளின் பிரத்யேக தயாரிப்புகள் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. மேற்குறிப்பிட்ட லிஸ்டில் சமீபத்தில் தான் கோவை நகர் சேர்ந்து கொண்டது. இங்கு லுலு ஹைபர் மார்க்கெட் திறக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கோவை லுலு மால் எப்படி இருக்கிறது?​​அபுதாபியில் லுலு குழுமம்​இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களை தினசரி ஆக்கிரமித்து வருகின்றன. லுலு மால் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் நிறுவனத் தலைமையான லுலு குழுமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வளைகுடா நாடுகளில் ரீடெய்ல் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழ்கிறது. இதன் தலைமையகம் அபுதாபியில் செயல்பட்டு வருகிறது.
கேரளாவை சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலிஇந்நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நம் இந்திய நாடு தான். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நட்டிக்கா நகரை சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி. இவர் தான் 2000ஆம் ஆண்டில் லுலு குழுமத்தை தொடங்கினார். தற்போது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய ரீடெய்ல் செயின் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக புகழ்பெற்று காணப்படுகிறது.
சர்வதேச அளவில் கிளைகள்ஆசியாவை தாண்டி அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிக்காவிலும் கால் தடம் பதித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் கணக்கில் அடங்காத அளவிற்கு லுலு விற்பனையகங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 5 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. இதை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை லுலு குழுமம் களமிறக்கியுள்ளது.பிரம்மாண்ட முதலீடுஅதாவது, இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் செய்ய உள்ளது. இதில் மால்கள் மட்டுமல்ல. பல்வேறு வர்த்தக ரீதியிலான திட்டங்களும் அடங்கியிருக்கின்றன. மேலும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் தொடங்கப்பட உள்ளன.
பொருளாதாரமும், வேலைவாய்ப்பும்இவற்றின் மூலம் இரண்டு நன்மைகள் இந்தியாவிற்கு கிடைக்கும். ஒன்று பொருளாதார முன்னேற்றம். மற்றொன்று வேலைவாய்ப்பு. அதுமட்டுமின்றி சுற்றுலா துறையும் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டாகும். இதற்காக மத்திய அரசு சிவப்பு கம்பளம் விரித்து லுலுவை வரவேற்றுள்ளது.
அடுத்த டார்கெட் ஹைதராபாத்அடுத்தகட்டமாக ஹைதராபாத் நகரில் பிரம்மாண்ட மால் ஒன்றை கட்டமைக்க லுலு குழுமம் முடிவு செய்துள்ளது. இது 2.2 மில்லியன் சதுர அடியில் அமைகிறது. இதில் லுலு ஹைபர் மார்க்கெட், லுலு பேஷன் ஸ்டோர், லுலு சினிமாஸ் ஆகியவை முக்கியமானவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தெலங்கானா மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.