சென்னை: நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பார்ட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஹன்சிகா நடந்து கொண்ட விதத்தை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தி உள்ளார்.
நடிகைகள் நயன்தாரா, அசின் எல்லாம் வடிவேலுவுடன் டூயட் பாடியும் நெருக்கமாகவும் கூட நடித்துள்ளனர். பல ஹீரோயின்கள் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஹன்சிகாவா? இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்டார் என ஒட்டுமொத்த திரையுலகமே ஷாக் ஆகி உள்ளது.
மைதா பொம்மை: பார்ட்னர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே வர்ணித்தார். ஹன்சிகா அவ்ளோ அழகு, அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருப்பாங்க.. உருட்டி வச்ச மைதா பொம்மை என வர்ணித்து விட்டு நேராக தனது மனதில் தைத்த அந்த விஷயத்தை மேடையிலேயே போட்டு உடைத்து ஹன்சிகாவின் மூக்கை உடைத்து விட்டார் ரோபோ சங்கர்.
காலில் விழுந்தும் சம்மதிக்காத ஹன்சிகா: பார்ட்னர் படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை ரோபோ சங்கர் டச் செய்வது போன்ற காட்சி ஒன்று படத்தில் இருந்துள்ளது.
ஆனால், அதற்கு ஹன்சிகா சம்மதிக்கவே இல்லையாம். ரோபோ சங்கரும் படத்தின் இயக்குநர் மனோஜ் தாமோதரனும் ஹன்சிகாவின் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த காட்சிக்கு நோ சொல்லி விட்டாராம் ஹன்சிகா.
ஹீரோ தான் தொடணும்: கால் விரலையாவது தொட்டுக்கிறேன் என ரோபோ சங்கர் கெஞ்சியும் ஹீரோ ஆதி மட்டும் தான் டச்சிங், காமெடி நடிகர் மற்றும் யாரும் நோ டச்சிங் டச்சிங் என ஹன்சிகா சொல்லி விட்டார். அப்போ தான் புரிந்தது ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் காமெடியன் தான் என்று தனது மன வருத்தத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்துள்ளார் ரோபோ சங்கர்.
உடல் நலக்குறைவு காரணமாக மெலிந்து ஆளே மாறிய ரோபோ சங்கர் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறாரே என சந்தோஷப்பட்ட அவரது ரசிகர்கள் இப்படி ஹன்சிகா நடிப்புக்கு கூட அவரை தொட விடவில்லை ஏன் என்று விளாசி வருகின்றனர். இதனால், தான் காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோக்களாக மாற ஆசைப்படுகின்றனரா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.