Krishna: திடீரென நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்.. கோபப்பட்ட ஹீரோ கிருஷ்ணா!

சென்னை: சன் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

இந்த சேனலில் பல தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முக்கியமான இடங்களை பிடித்து சேனலுக்கு பெருமை சேர்க்கின்றன.

சில தொடர்களை திடீரென நிறுத்தும் முடிவை சேனல் அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தாலாட்டு சீரியல் நிறைவு பெற்றுள்ளது.

தாலாட்டு சீரியல் நிறைவு குறித்து கிருஷ்ணா கோபம்: நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் சேனல்கள் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களுக்கிடையில் அதிகமான போட்டி காணப்படுகிறது. குறிப்பாக இந்த சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் கணிக்கப்பட்டு அதையொட்டியே முதன்மை இடம் குறித்தும் பிக்ஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியில் தற்போது சன் டிவிதான் முதன்மையான இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவி காணப்படுகிறது.

Urban category-யில் விஜய் டிவி முதலிடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்த ரேட்டிங்கில் சன் டிவி தொடர்ந்து முதலிடத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சேனலின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கயல், எதிர்நீச்சல், இனியா, சுந்தரி என சேனலின் அடுத்தடுத்த சீரியல்கள் வீட்டிலிருப்பவர்களையும் வெளியில் சுற்றுபவர்களையும் கூட கட்டிப் போட்டு வருகிறது. வெளியில் சுற்றுபவர்களும் மொபைல் மூலம் சீரியல்களை பார்த்துக் கொள்கின்றனர்.

இதனிடையே தன்னுடைய டிஆர்பியை மேலும் அதிகரிக்கும்வகையில் சன் டிவி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சேனலின் தாலாட்டு சீரியல் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சீரியலில் அம்மா மற்றும் மகன் உறவு, மற்றும் உறவுச்சிக்கல்களை அமையமாக கொண்டு எபிசோட்கள் ஒளிபரப்பாகிவந்த நிலையில், ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் மீடியம் லெவலில் இருந்தது.

இந்நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து ரசிகர்களும் சீரியல் குழுவினரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சீரியலின் ஹீரோ கிருஷ்ணாவும், இந்த சீரியல் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்று தனது சமீபத்திய பேட்டியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தெய்வமகள் என்ற சீரியல்மூலம் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்திய இவர், தாலாட்டு சீரியலில் நடித்து வந்தார்.

சீரியல் ரசிகர்கள் ஆதரவுடன் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், திடீரென சீரியல் நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம்வரையில் சீரியல் தொடரும் என்று சேனல் தரப்பில் கூறப்பட்ட நிலையில், திடீரென தற்போது சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து அவர் தனது வருத்தத்தையும் கோபத்தையும் பதிவு செய்துள்ளார். அடுத்தடுத்து சேனலில் பல சீரியல்கள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளதாகவும் அதற்காக தாலாட்டு சீரியலை நிறைவு செய்துள்ளதாக தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.