Trisha: விஜய்யை முந்திக் கொண்டு தனியா சம்பவம் செய்யும் த்ரிஷா: இதை சத்தியமா எதிர்பார்க்கல

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Trisha Krishnan: லியோ படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் த்ரிஷா தனியாக வந்து சம்பவம் செய்யப் போவது குறித்து பேசப்படுகிறது.

​லியோவில் த்ரிஷா​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறார். லியோ படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான் த்ரிஷா குறித்த அந்த தகவல் வெளியாகியுள்ளது.சரத்குமார்​”Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு!​​தி ரோட்​அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் த்ரிஷா. ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள அந்த படத்தில் டான்ஸிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், லட்சுமி ப்ரியா, சந்தோஷ் பிரதாப், விவேக் பிரசன்னா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தி ரோட் படத்தை லியோவுக்கு முன்பு ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.
​ஆகஸ்ட் ரிலீஸ்​தி ரோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். மேலும் விளம்பர நிகழ்ச்சிகளையும் துவங்கவிருக்கிறார்களாம். விளம்பர நிகழ்ச்சிகளில் த்ரிஷாவை பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் தற்போதே குஷியாகிவிட்டார்கள்.

​Maamannan:மாமன்னனுக்காக உதய்ணாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?!: இது நயன்தாரா சம்பளத்தில் பாதி கூட இல்லையே

த்ரிஷா படம்அனைவரும் லியோ பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் தி ரோட் படத்தில் த்ரிஷா நடித்திருப்பதை பலரும் மறந்துவிட்டார்கள். இந்நிலையில் தான் லியோவை முந்திக் கொண்டு வருகிறது தி ரோட். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தி ரோட் என்பது குறிப்பிடத்தக்கது.​மிரண்ட படக்குழு​தி ரோட் படத்தை பார்த்த படக்குழு ஆடிப் போய்விட்டதாம். அந்த அளவுக்கு த்ரிஷா தன் நடிப்பால் மிரட்டியிருக்கிறாராம். படக்குழு மிரண்டதில் ஆச்சரியம் இல்லை. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் த்ரிஷா என்பது தான் அனைவருக்கும் நன்றாக தெரியுமே. தி ரோட் படம் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்தத் துவங்கிவிட்டார்கள்.

​Maamannan:மாமன்னனில் வடிவேலு மனைவியாக நடித்தவர் பெரிய இடத்து மருமகள்னு தெரியுமா?

​​பி.எஸ்.2​பொன்னியின் செல்வன் 2 தான் த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆகும். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர்ந்தார் த்ரிஷா. சேலை அணிந்தாலும் சரி, சுடிதார் அணிந்தாலும் சரி அழகாக இருந்தார். த்ரிஷாவுக்கு 40 வயதாகிவிட்டது என்றால் நம்பவே முடியவில்லை என்று ரசிகர்கள் வியந்தார்கள். இந்நிலையில் மீண்டும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறார்.

​சம்பளம்​பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்களில் தனக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து சம்பளத்தை உயர்த்திவிட்டார் த்ரிஷா. அவர் தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 10 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவை ஓவர்டேக் செய்துவிட்டார் த்ரிஷா என அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அதை நயன்தாரா ரசிகர்கள் ஏற்கவில்லை. என்றும் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் தான். அது எங்கள் நயன்தாரா தான் என்கிறார்கள்.

​Maamannan: மாமன்னனில் வந்த ஃபஹத் ஃபாசில் கேரக்டர் நிஜத்தில் எடப்பாடி பழனிசாமியா?: ரியாக்ட் செய்த உதயநிதி ஸ்டாலின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.