அம்பிகையின் திருவடிவங்களில் ‘ஸ்ரீலலிதா’ என்ற மங்கலதேவி வடிவம் சகல சௌபாக்கியங்களும் அருளக் கூடியது என்கிறார்கள் பெரியோர்கள். எண்ணம், வாக்கு, எழுத்து எதிலும் அடங்காத பேராற்றல் கொண்ட ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அரச போக வாழ்வை அருளும் தயாபரி. ஸ்ரீலலிதாவைப் போற்றும் வழிபாடுகளில் உயர்வானது நவாக்ஷரி மஹாஹோமம்.
இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். குறிப்பாக குழந்தைப்பேறு, தோஷ நிவர்த்தி, ஐஸ்வரியம் பெருகுதல், உத்தியோக-வியாபார அபிவிருத்தி, ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
அம்பிகைக்கு உகந்த ஆடி பூர நட்சத்திரத்தில் இந்த நவாக்ஷரி ஹோமம் நடத்தினால் அம்பிகை மகிழ்ந்து வேண்டும் வரங்களை அளிப்பாள் என்கின்றன ஞான நூல்கள். குறிப்பாக இதில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் அதிகார பலமும் தொழில் வளமும் கிடைக்கும். சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஸ்ரீலலிதா பதவி உயர்வும் அரசியல் எதிர்காலமும் வழங்கக் கூடியவள். நிதி ஆதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மைகளை அளிக்கக் கூடியவள் என்கிறார்கள். சண்டிகாதேவியின் மூலமான நவாக்ஷரியை ஜபம் செய்து ஹோமம் செய்வித்தால் இகபர சௌக்கியங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதிகம்.
சக்தி பூஜைகளில் முதலாவதாகவும், மேன்மையானதாகவும் இருப்பது இந்த ஹோமம். வக்கிரமான கிரகங்கள், துஷ்ட சக்திகள், கண் திருஷ்டி, எதிரிகள், கண்டங்கள், விபத்து, ஆபத்து போன்றவைகளில் இருந்து காக்கும் கவசமாகவும் இந்த ஹோமம் விளங்குகிறது. இத்தனை பலன்களைத் தரக்கூடிய இந்த மகாஹோமம் அம்பிகைக்கு உரிய ஆடிப்பூர நன்னாளில் 22-7-2023 அன்று காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை சக்தி விகடனும் ஆவடி செவ்வாய்பேட்டை அடுத்த கிளம்பாக்கம் ஸ்ரீலலிதா மஹா திரிபுர ஸுந்தரி ஆலய நிர்வாகமும் இணைந்து நவாக்ஷரி மஹாஹோமம் நடத்த உள்ளது.
சென்னை – திருவள்ளூர் வழியில் செவ்வாய்பேட்டை அடுத்து அமைந்துள்ள கிளம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலலிதா மஹா திரிபுர ஸுந்தரி ஆலயம். ஒரு கையில் கரும்பு, அடுத்த கையில் பஞ்சபுஷ்பம், ஒரு கால் மடித்து மறுகால் தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோலத்தில் அன்னை வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டாலே மனதின் பாரமெல்லாம் நீங்கி நிம்மதியும் ஆனந்தக் கண்ணீரும் தோன்றிவிடும் என்பது உண்மை. ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எழுந்தருளி உள்ள இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது. குறிப்பாக இங்கு வந்து அம்பிகைக்கு வளையல் மாலை சாத்தி வழிபாட்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல இங்கு வந்து அம்பிகைக்கு சேலை சாத்தி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.
வெகுகாலத்துக்கு முன்பு இந்த கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரால் பாம்பு புற்று ஒன்று கண்டறியப்பட்டது. அவர்களின் கனவில் தோன்றிய அம்பாள், கரும்பு வில்லும் பாசாங்குசமும் பஞ்ச புஷ்பமும் கொண்டு காட்சி தந்தாள். ஸ்ரீலலிதாம்பிகையாக தான் அங்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தாள். காலங்கள் சென்றன, அன்னையின் விருப்பத்தை நிறைவேற்றும் காலம் கனிந்ததும் அன்பர்கள் சிலர் கூடி காஞ்சி ஸ்ரீமடம் சென்று உத்தரவு கேட்டனர். அங்கிருந்த பெரியோர்களின் ஆணைப்படி இங்கு ஸ்ரீலலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார் என்கிறது தலவரலாறு. திருமீயச்சூர் போலவே இங்கும் லலிதாம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள், விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. ஒவொரு மாத பூர நட்சத்திரத்தின்போதும் இங்கு நவாக்ஷரி ஹோமம் நடைபெறுகிறது. சித்திரை பௌர்ணமி நாளில் நடத்தப்படும் அம்பிகை நெய்க்குள தரிசனம் இங்கு அற்புதமானது.
செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீலலிதா மஹா திரிபுர ஸுந்தரி ஆலயத்தை அடைந்தால் சகல நன்மைகளும் அடையலாம் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.
ஸ்ரீ லலிதா மஹா திரிபுர ஸுந்தரி அம்பாள் தேவஸ்தானம், கிளாம்பாக்கம் கிராமம், திருவள்ளூர் மாவட்டம்
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
குறிப்பு: சங்கல்பம் செய்துகொள்பவர்கள் உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404